வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சாச்சனாவுக்கு நடந்தது அநியாயம்.. பிக்பாஸ் 8க்கு வலுக்கும் எதிர்ப்பு, என்ன செய்யப் போறாரு VJS?

Biggboss 8: கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலயே அப்படிங்கிற நிலைமையில் இருக்கிறார் சாச்சனா. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல கனவுகளோடு கலந்து கொண்ட சிறு பெண் தான் இவர். ஆனால் அநியாயமாக இப்போது வெளியேறி இருக்கிறார்.

நேற்று நிகழ்ச்சி ஆரம்பித்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் எலிமினேஷன் என்ற முடிவு ரொம்பவும் அநியாயம். அதிலும் வெற்றி கோப்பையை புடுங்கி விட்டு தவற விட்டு விட்டீர்கள் என்று பிக்பாஸ் சொன்னது தான் அநியாயத்தின் உச்சம்.

இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்காத சாச்சனா கண்ணீரோடு வீட்டை விட்டு வெளியேறிய ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் மக்களின் ஓட்டு இல்லாமல் எப்படி அவரை வெளியேற்றலாம் என்ற எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

இப்படித்தான் கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி எதிர்ப்புக்கு ஆளானார் கமல். அதே போல் தான் இந்த சீசன் தொடக்கத்திலும் நடந்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் முடிவு என்ன.?

இதில் விஜய் சேதுபதிக்கும் சம்பந்தம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே சமயம் மக்களின் குரலாக இருக்கும் அவர் நிச்சயம் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டும். இந்த எலிமினேஷனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சாச்சனாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தேவையில்லாமல் அவரை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு அசிங்கப்படுத்தி அனுப்பியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் பிக் பாஸ் பார்வையாளர்கள் தற்போது விஜய் சேதுபதிக்கு இது பற்றிய கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் வார இறுதியில் அவருடைய கருத்து என்னவாக இருக்கும் என்பதை அறிய பார்வையாளர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். நிச்சயம் இந்த விவகாரத்தில் மக்கள் செல்வன் தன் எதிர்ப்பை காட்டுவார் என நம்பப்படுகிறது. ஒருவேளை வைல்ட் கார்டு என்றாக சாச்சனா உள்ளே வரவும் வாய்ப்பு இருக்கிறது.

அநியாயமாக வெளியேற்றப்பட்ட விஜய் சேதுபதியின் மகள்

Trending News