ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் விழி பிதுங்கி நிற்கும் கர்ணன் பட இயக்குனர்.. ரிலீஸ் ஆகுமா என்ற கவலையில் தனுஷ்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2019ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த அசுரன் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியதால், பல தடைகளையும் மீறி வெற்றி கண்டது. அதேபோல் தற்போது தனுஷின் 41வது படமான கர்ணன் படத்தை பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

karnan
karnan

இந்தப்படத்திலும் மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டே படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனராம். ஏனென்றால் கடந்த 1996ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சியில் ஒதுக்கப்பட்ட தலித் மக்களுக்காக போராடிய போராளி முருகேசன் என்பவர்.

சமீபத்தில் கர்ணன் திரைப்படத்திலிருந்து வெளியான ‘கண்டா வர சொல்லுங்க’ என்ற பாடலில் தனுஷின் உருவத்தை சுவரில் கரியால் வரைந்திருப்பார். ஆனால் உண்மையில் அது மேலவளவு முருகேசனின் உருவப்படம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாபு ரவீந்தர் என்பவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தப் பதிவுடன் பல உண்மை தகவல்களை பாபு ரவீந்திரன் தெரிவித்துள்ளார். ஏனென்றால் 28-12- 1996 அன்று அறிவிக்கப்பட்ட தேர்தலில் தலித் மக்கள் மக்களின் ஒருவரான முருகேசன் ஊராட்சி மன்ற தலைவர் ஆனதால். அங்குள்ள தலித் மக்கள் பலவித பிரச்சனையை சந்தித்தது மட்டுமல்லாமல், அதில் மூன்று தலித்துகளின் வீடுகள் தீக்கிரையானது.

அவர்களுக்கு நிவாரணத் தொகையை பெற்றுத் தரும் நோக்கத்தில் முருகேசன் ஆட்சியரை சந்தித்து திரும்பும் வழியில், மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேர் படுகொலை செய்யப்பட்டு அவர்களின் தலை, 1/2  கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள கிணற்றில் வீசப்பட்டது.

அதன் பின் 90 நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின் பலருடைய முயற்சியால் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இருப்பினும் இரண்டு கழகங்களும் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது என்று பாபு ரவீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கர்ணன் படம் ஜாதி கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்போது பாபு ரவீந்திரன் பதிவிட்டு இருக்கும் இந்த தகவல் போராளி முருகேசனின் பற்றிய செய்தி வெளியான பத்திரிகை பகுதியையும் பதிவிட்டு வருகின்றன.

Trending News