வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஆப்பு.. வசூலில் விழப்போகும் பெருத்த அடி

Sivakarthikeyan, Ayalaan : இப்போது விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக போட்டி நடிகர்களாக பார்க்கப்படுவது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் தான். இந்த வருடம் இவர்களின் படங்களை தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனுஷுக்கு கேப்டன் மில்லரும், சிவகார்த்திகேயனுக்கு அயலான் படங்களும் பொங்கலுக்கு வெளியாக இருந்தது.

ஆனால் இதில் இப்போது சிக்கல் ஏற்படும் விதமாக ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது. அதாவது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் இப்போது பான் இந்திய மொழி படங்களாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த பொங்கலுக்கு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

Also Read : 1200 கோடி வசூல்னா சும்மாவா.! பிரம்மாண்ட கூட்டணிக்கு அடி போட்ட சிவகார்த்திகேயன் 

அதாவது தெலுங்கில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம், ரவி தேஜாவின் ஈகிள், தேஜா சாஜாவின் ஹனுமான் மற்றும் வெங்கடேஷ் ரகுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சாய்ந்த படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதனால் அங்கு தியேட்டர் கிடைப்பதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ஆகையால் பொங்கல் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு தான் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களுக்கு அங்கு திரையரங்குகள் கிடைப்பது சாத்தியமாகி உள்ளது. இந்த சூழலில் ஒருவேளை தமிழில் வெளியான பிறகு படத்திற்கு மோசமான விமர்சனம் கிடைத்தால் கண்டிப்பாக அக்கட தேசங்களில் படத்திற்கான ரசிகர் கூட்டம் வருவது குறைவுதான்.

ஆகையால் பெரிய அளவில் இந்த படங்களின் வசூல் பாதிப்பு அடையவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவருமே இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள். படம் நன்றாக இருந்தால் மட்டுமே அவர்கள் நினைத்தபடி பெரிய அளவில் வசூலை எடுக்க முடியும்.

Also Read : அடுத்த வருடம் ஆக்ஷன் படமாக களமிறங்க போகும் 5 படங்கள்.. கீரியும் பாம்புமாக நிற்கப்போகும் சிம்பு தனுஷ்

Trending News