புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஸ்லீவ்லெஸ் உடையில் ப்ரியங்கா மோகன் குடுத்த ஸ்டில்ஸ்.. வரே வாவ்!

சென்னையைச் சேர்ந்தவர் பிரியங்கா மோகன். கடந்த 2019 ஆம் ஆண்டு கிரிஷ் ஜி இயக்கிய ஒன் த் கதே ஹெல்லா படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகம் ஆனார். நானியின் கேங் லீடர் என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார்.

சமீபத்தில், தீபாவளிக்கு ரிலீசான பிரதர் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இப்படமும் வெற்றி பெற்றது.

தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஓஜி. இதில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸையொட்டி ரிலீசாகவுள்ளது. இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News