செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித் மாதிரி நானும் செய்வேன் என்பதால் வந்த விபரீதம்.. உயிருக்கு போராடும் நிலையில் விஜய் ஆண்டனி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இத்திரைப்படம் இவருக்கு ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல் திரை உலக பயணத்தில் இவருக்கு இப்படம் திருப்புமுனையாகவும் அமைந்தது. இதை எல்லாரும் ரசிக்கும் படியாக அம்மாவின் சென்டிமென்டே முன்னணியாக வைத்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இப்படத்தின் முதல் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். இசையமைப்பாளர் நடிகர் மற்றும் இயக்குனர் என்று பல பரிமாணங்களில் தன் திறமையை காட்டி வருகிறார்.

Also read: பிச்சைக்காரன்-2 படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஜோடி போட்ட கும்தா நாயகி.. ஒரு ஹிட் படத்தால் கொட்டும் பட வாய்ப்புகள்!

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள லங்காவி எனும் தீவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி டூப் போடாமல் நடித்திருக்கிறார். மேலும் கடலில் ஓட்டும் மோட்டர் பைக் எடுத்து விஜய் ஆண்டனி ஓட்ட முயற்சி செய்திருக்கிறார்.

பின்னர் தண்ணீருக்கு தேவையான பாதுகாப்பு கவசம் இல்லாமலும், நீச்சல் தெரியாமலும் மற்ற யாரும் செய்ய வேண்டாம். இந்தக் காட்சியை நானே நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் எதிர்பாராத விதமாக இன்னொரு படகின் மீது இந்த பைக் மோதி முகம் முழுவதும் படுகாயம் ஏற்பட்டு தண்ணீரில் விழுந்து நீச்சல் தெரியாமல் கடல் தண்ணீரை குடித்து மூழ்கி இருக்கிறார்.

Also read: ஹிட்டு கொடுக்க வேற வழி தெரில குமாரு.. சூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தில் விழுந்த விஜய் ஆண்டனி

பின்பு எப்படியோ அங்கிருந்த அசிஸ்டன்ட் டைரக்டர் உதவியுடன் காப்பாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இவரை கூடிய விரைவில் சென்னைக்கு அழைத்து வர முயற்சிகள் நடந்து வருகிறது. மேலும் தீவிர சிகிச்சையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி பேச தொடங்கி இருக்கிறார். இதே மாதிரி சண்டை காட்சிகள் நான் மட்டுமே செய்வேன் என பல அடிகள் பட்டுள்ளார் அஜித்.

இவருக்கு அடுத்தகட்ட சிகிச்சையாக சென்னையில் சிகிச்சை தொடரும் என அறிவித்திருக்கிறார்கள். ரசிகர்கள் இவர் விரைவில் குணமடைய இணையதளத்தில் தங்கள் பதிவுகளை போட்டு வருகின்றன. மேலும் இவர் முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியின் கெட் அப்.. வைரலாகுது மரண மாஸான போஸ்டர்

Trending News