வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பீஸ்ட் படம் இப்படிதான் இருக்குமாம்.. ஸ்டன்ட் மாஸ்டர் சொன்ன மாஸ் தகவல்

தமிழின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் தளபதி விஜய் சமீபத்தில் தளபதியின் பிறந்தநாளுக்கு வெளியான தளபதி நடித்த “பீஸ்ட்” படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) வெளியாக சமூக வலைதளங்களின் பக்கங்களையே ரசிகர்களால் திணரடித்தது.

இப்போது “பீஸ்ட்” திரைப்படம் தொடர்பாக மேலும் ஒரு செய்தியும் தளபதி ரசிகர்களுக்காக படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரால் வெளியிடப்பட்டது.

அதன்படி படத்தின் அமைப்பு ஹாலிவுட்டிற்கு நிகராக இருக்கவேண்டும் என்றும் இயக்குனர் நெல்சன் பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படியே அவரின் சிந்தைக்கான செயல்பாடாக படக்குழுவும் அவரை திருப்திப்படுத்தும் வகையில் அவுட்புட் கொடுத்து வருகிறது.

beast-vijay
beast-vijay

அதன் படி மாஸ்டர் அன்பறிவு கூறுகையில் பீஸ்ட் தமிழில் வெளியாகும் ஜேம்ஸ் பாண்ட் படம் என்றும் இதுவரை கண்டிராத அளவிற்கு படத்தின் தன்மை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியோ படம் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு விருந்தாகும் என்பது நிச்சயம்.

Trending News