தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து இயக்குனர்களுக்கும் தளபதி விஜய்யுடன் சேர்ந்து ஒரு படமாவது பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதில் பலருக்கும் நீண்டநாள் ஆசையாக தற்போது வரை நிறைவேறாமல் மனதுக்குள் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டு புலம்புவார்கள்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் சினிமா கேரியர் மட்டுமல்லாமல் அவரது புகழ் உலக அளவில் அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் மற்ற மொழி நடிகர்களே வியந்து போகுமளவுக்கு மாஸ்டர் படம் தமிழ்நாட்டில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது.
உயிருக்கு ஆபத்தான இந்த சூழ்நிலையிலும் விஜய் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரை நோக்கி படையெடுத்து வந்தது அனைவருக்குமே ஆச்சரியத்தைக் கொடுத்தது. மாஸ்டர் படத்திற்கு வந்த கூட்டத்தை பார்த்துவிட்டு அப்பறம் முன்னணி நடிகர்கள் தற்போது ஓடிடி ரிலீஸில் இருந்து பின்வாங்கி தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் விஜய் அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தளபதி 66 படத்தின் இயக்குனர் பற்றிய பேச்சுக்களும் கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் பிரபல இயக்குனர் விஜய்யை வைத்து ஒரு ஹாலிவுட் படம் எடுக்க வேண்டும் என கூறிய யோசனை விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை. நம்ம கௌதம் மேனன் தான். 2012ஆம் ஆண்டு விஜய்யை வைத்து ஹாலிவுட் ஸ்டைலில் யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை ஆரம்பித்து பின்னர் எதிர்பாராத சில சிக்கல்களால் அந்த படத்தை கைவிட்டார். தற்போது அதைவிட ஸ்டைலிஷாக ஹாலிவுட் தரத்தில் ஒரு கதையை ரெடி செய்து வைத்துள்ளாராம்.
அந்த படத்தை ஹாலிவுட் படமாக எடுத்தாலும் செமையாக இருக்கும் என விஜய்க்காக கதை எழுதி காத்துக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். கடந்த 8 வருடமாக விஜய்யை வைத்து படம் இயக்க காத்துக்கொண்டிருக்கும் கௌதம் மேனன் பக்கம் விஜய் பார்வை திரும்புமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.