வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அப்பாவை மாதிரி இனி ஒரு விஏஓ கூட சாகக்கூடாதுன்னு நீதிபதியாகும் மார்சல்.. சரித்திரத்தை புரட்டிப்போட்ட நிஜக்கதை

success story of Thoothukudi VAO killed by sand smuggling gang son elected as civil: பொல்லாத உலகத்திலே என்னை ஏன் படைத்தாய் இறைவா! என்பது போல் நேர்மையான அரச அதிகாரி ஒருவரை தான் செய்த வேலைக்காக கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் அரங்கேறியது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் என்ற அதிகாரி, தான் செயலாற்றும் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த மணல் கொள்ளையை கண்டுபிடித்து கொள்ளைக்காரர்களை எச்சரிக்கை செய்திருந்தார்.

இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்த லூர்து பிரான்சிசை 25.04.2023  அன்று அவரது அலுவலகத்திற்கு வந்து கொள்ளைக்காரர்கள் இருவரும் சரமாரியாக  அரிவாளால் தாக்கி கொன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

Also read: இரண்டு திருமணம் செய்தும் விடாத ஆசை.. 61 வயதில் புது மனைவிக்கு எங்கும் அண்ணாமலை பட நடிகர்

இது பற்றி தூத்துக்குடி கலெக்டர் கூறுகையில்  லூர்து பிரான்சிஸ் ஏற்கனவே ஆதிச்சநல்லூர் அகழாய்வின்போது அன்னியர்கள் அபகரித்த அரசு நிலத்தை மீட்டுக் கொடுத்த நேர்மையான அதிகாரி என்றும், தற்போதும் மணல் கடத்தலை தடுப்பதற்காக தீவிரமாக உழைத்தவர் என்றும் புகழாரம் செய்தார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், லூர்து பிரான்சிசின் சேவையை பாராட்டி அவருக்கு ஒரு கோடி நிதி உதவி அளித்திருந்தார். லூர்து பிரான்சிசின் மறைவால் அவரது குடும்பம் துயரால் வாடியது. அவரது மகன் மார்சல் யேசுவடியான் தந்தையை இழந்த நிலையில் மிகவும் வேதனையுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில் தனது கடின உழைப்பாலும் முயற்சியாலும் சிவில் சர்வீஸ் தேர்வு எதிர்கொண்ட மார்சல் யேசுவடியான் சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்று உள்ளார். இதனை அறிந்த தூத்துக்குடி சரகத்திற்கு உட்பட்ட காவல் கண்காணிப்பாளர்களும் பாஜகவின் தலைவர் அண்ணாமலை உட்பட பல அரசியல் பிரமுகர்களும் மார்சல் ஏசுவடியானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அப்பாவை மாதிரி இனி ஒரு விஏஓ கூட சாகக்கூடாது  என நீதிபதியாகும் மார்சலின் உழைப்பு சாதனை அல்ல! சரித்திரம்!

Also read: 2024 வெற்றி பெற தவிக்கும் படங்கள்.. மூளையை கழட்டி வீட்ல வச்சுட்டு போய்பாருங்க விளாசிய ப்ளூ சட்டை மாறன்

Trending News