செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சுதா கொங்காரா, ஏஆர் முருகதாஸுக்கு டிமிக்கி கொடுத்த சஞ்சய்.. தாத்தா சப்போர்ட்டில் முளைத்திருக்கும் தளபதியின் வாரிசு

Thalapathy Son: பொதுவாக பிரபலங்களாக இருக்கும் நடிகர்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் அதற்கு வெற்றி இயக்குனர்களிடம் கூட்டணி வைத்தாலே போதும். தானாகவே அவர்கள் அசுர வளர்ச்சியை அடைந்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் சுதா கொங்காரா மற்றும் ஏஆர் முருகதாஸ். இவர்கள் கூட்டணியில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று பல முன்னணி நடிகர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த இயக்குனர்கள் ஒரு ஹீரோவை தேடி அவருடைய வீட்டிற்கு போயிருக்கிறார்கள் என்றால் அது விஜய்யின் மகனை தேடி தான். அப்போது ஒரு தந்தையாக தன் மகனுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருகிறது என்று சந்தோஷப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவர் இப்போது நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி இருக்கிறார்.

Also read: தளபதி 68ல் விஜய் தங்கச்சியாக சாய்சில் இருக்கும் 4 நடிகைகள்.. கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் சீக்ரெட்ஸ்

அதற்கு காரணம் அவர் மேற்படிப்புக்காக வெளிநாடு போக வேண்டும். அவர் படிப்பை முடித்துவிட்டு வரும் வரை கொஞ்சம் காத்திருங்கள் என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறார். மேலும் தன் மகனை ஹீரோவாக ஆக்க வேண்டும் என்ற சந்தோசத்தில் கனவு கண்டு கொண்டிருந்தார். அதற்கு ஒரு படி கற்களாக தான் வேட்டைக்காரன் படத்தில் அவரை நடிக்க வைத்து அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.

ஆனால் இப்படி விஜய் கண்ட கனவை சுக்கு நூறாக உடைத்து விட்டு தாத்தா சப்போர்ட்டில் அவரைப் போலவே இயக்குனராக முளைத்து தன்னுடைய அப்பாவிற்கு ஷாக்கை கொடுத்திருக்கிறார். இதில் விஜய்க்கு எந்தவித உடன்பாடும், விருப்பமும் சிறிதளவு கூட இல்லை. ஆனால் இவருடைய இந்த மாற்றத்தை நினைத்து எஸ்ஏ சந்திரசேகர் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

Also read: நன்றி மறந்த தளபதி.. விஜய்க்காக போராடி காப்பாற்றி விட்ட நடிகருக்கு செய்த துரோகம்

இதனால் விஜய் மட்டும் இல்லை, சுதா கொங்காரா மற்றும் ஏஆர் முருகதாஸும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். என்னடா நம்ம அவரை வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நமக்கு டிமிக்கி கொடுத்து விட்டு  இயக்குனராக வந்து விட்டாரே என்று அவர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜேசன் சஞ்சய்யின் அவதாரம் இருக்கிறது. இனி ஒரே வீட்டில் இரு வெவ்வேறு துருவங்களாக சினிமாவில் ஜொலிக்கப் போகிறார்கள். ஏற்கனவே விஜய் அவருக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். அதேபோல் இவருடைய மகனும் இயக்குனராக வெற்றி பெற வேண்டும்.

Also read: எல்லாம் விஜய்யை அடிபணிய வைக்கத்தான்.. பப்ளிசிட்டிக்காக தில்லுமுல்லு செய்யும் லைக்கா

Trending News