லோகேஷ் கைவிட்ட வாரிசு நடிகர்.. டர்னிங் பாயிண்ட் என நினைத்து மொக்கை வாங்கிய ஹீரோ

சினிமாவை பொறுத்தவரையில் வாரிசு நடிகர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் அதில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அவர்களுடைய திறமையும், உழைப்பும் தான் முக்கியம். அந்த வகையில் பல வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போய் உள்ளனர்.

அந்த லிஸ்டில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரின் வாரிசு ஒருவர் வெற்றி படம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்தும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒரு ஹிட் படம் கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அதுமட்டுமின்றி அவரின் அப்பாவின் பெயரையும் அவரால் காப்பாற்ற முடியவில்லை.

Also Read : கரும்பு தின்ன கூலி எதற்கு.. டாப் ஹீரோக்கள் க்யூவில் நிற்க, பிளாப் நடிகருக்கு கதை சொன்ன லோகேஷ்

அதாவது லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்தால் எப்படியும் ஒரு பெரிய இடத்திற்கு சென்று விடலாம் என ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் லோகேஷின் படங்கள் மாபெரும் வெற்றி பெறும். அதுமட்டுமின்றி அந்த நடிகர்களின் மார்க்கெட் உயர்வது ஒரு பக்கம் இருந்தாலும், லோகேஷ் தனது அடுத்தடுத்த படங்களிலும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்.

ஆனால் லோகேஷினாலும் கைவிடப்பட்டுள்ளார் அந்த வாரிசு நடிகர். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை தன் படங்கள் மூலம் கட்டிப்போட்டவர் பாக்யராஜ். இவரின் மகன் சாந்தனு நடிப்பு, நடனம் என அனைத்தையும் கற்றுக்கொண்டு சினிமாவில் நுழைந்தார்.

Also Read : முதல் நாள் படப்பிடிப்பில் மிரள விட்ட லோகேஷ்.. தளபதி 67 படக்குழுவை அண்ணாந்து பார்த்த விஜய்

ஆனால் எதிர்பார்த்த அளவு சாந்தனுவால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் சாந்தனு நடித்திருந்தார். ஆகையால் மாஸ்டர் படம் சாந்தனு திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாஸ்டர் படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் மொக்கையாக அமைந்தது. இந்தப் படத்திலும் அவருக்கு ஸ்கோப் கிடைக்கவில்லை. இவ்வாறு சாந்தனு அடுத்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என ஒவ்வொரு படத்திலும் தனது கடின உழைப்பை போட்டு வந்தாலும் அவருக்கான அங்கீகாரம் தற்போது வரை தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

Also Read : முட்டி மோதிப் பார்த்த சாந்தனு.. நமக்கு என்ன வருதோ அதை செஞ்சுகிட்டு போயிட்டே இருக்கணும்!