திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பயங்கர ஸ்பீடில் இருக்கும் வாரிசு.. மேனேஜரை வண்டை வண்டையாக கிழிக்கும் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்திலிருந்து வரும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பிசினஸ் கோடிக்கணக்கில் கல்லா கட்டியதை அடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. வரும் பொங்கலுக்கு துணிவுடன் மோத இருக்கும் இந்த திரைப்படம் வேற லெவல் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்ற அப்டேட் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் இப்போது வரை சோசியல் மீடியாக்களை திணற வைத்துக் கொண்டிருக்கிறது. பிரபலங்கள் முதல் நண்டு சிண்டு வரை இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

Also read: விஜய்யுடன் நடிக்க மறுக்கும் ஹீரோக்கள்.. தளபதி 67க்கு அர்ஜுனை போல் நோ சொன்ன 90ஸ் ஹீரோ

இப்படி வாரிசு ஒரு பக்கம் ஜெட் வேகத்தில் பயங்கர ஸ்பீடில் சென்று கொண்டிருக்க துணிவு திரைப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வரவில்லை. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலுக்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது சோர்ந்து போய் இருக்கின்றனர். வாரிசு இரண்டாவது சிங்கிலே வெளியாகும் நிலையில் இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே பொங்கி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவையும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வண்டை வண்டையாக திட்டி கிழித்து கொண்டிருக்கின்றனர். உங்கள் வேலையை நீங்கள் ரிசைன் செய்து விடுங்கள், அந்த இடத்திற்கு நாங்கள் வருகிறோம் என்றும், இன்னும் எத்தனை நாள் தான் நாங்கள் காத்திருப்பது என்றும் ஆதங்கத்தோடு கேட்டு வருகின்றனர்.

Also read: வாரிசு படத்திற்கு கும்பிடு போட்ட விஜய்.. தடபுடலாக ஆரம்பமாகும் தளபதி 67

மேலும் நீங்கள் பிஆர்ஓவாக இருப்பதற்கு தகுதியே இல்லை என்றும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே வலிமை திரைப்படம் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவும் சோதித்தது. அதனால் இந்த படமாவது விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைத்தால் வலிமையை விட இது படுமோசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கதறி வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்கள் துணிவு திரைப்படம் பற்றி அவ்வப்போது சோசியல் மீடியாவில் கொடுக்கும் அப்டேட் அளவுக்கு கூட அஜித்தின் மேனேஜர் எந்த விஷயத்தையும் இதுவரை கூறவில்லை என்பதே உண்மை. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் தயாரிப்பாளர் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கள், அதை தொடர்ந்து ட்ரைலரும் வெளியாகும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: இதுவரை பார்க்காத அஜித்தை இனிமேல் பார்ப்பீர்கள்.. துணிவு கேரக்டரை பற்றி க்ளூ கொடுத்த போனி கபூர்

Trending News