வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சூர்யா 42 படத்தில் இப்படி ஒரு பிளாஷ்பேக்கா.! பெரிய காரியம் செய்த ரோலக்ஸ்

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா, விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே ரோலக்ஸ் கேரக்டரில் நடித்து மிரட்டி இருப்பார். இதன் பிறகு தற்போது சூர்யா 42 என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் சூர்யா எப்படி கமிட்டானார் என்ற பிளாஷ்பேக் தற்போது தெரியவந்துள்ளது. சூர்யா எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். தன்னுடைய அறக்கட்டளை சார்பாக நிறைய பேருக்கு உதவி செய்து வருகிறார். இப்பொழுது சிறுத்தை சிவா உடன் ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

Also Read: 10 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் சூர்யா-42.. இன்னும் பல சுவாரஸ்யமான அப்டேட் கொடுத்த இயக்குனர்

சூர்யா 42 படத்தை யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. ஆனால் இதற்கு முன்பு ஒரு கட்டத்தில் எல்லா பக்கமும் விழுந்த அடியால் பட தயாரிப்பை விட்டு விலக நினைத்த ஞானவேல் ராஜா, கடைசியில் சூர்யா குடும்பத்திடம் தஞ்சமடைந்தார்.

சிவக்குமார், அவரது மனைவி எல்லோரும் ஞானவேல் ராஜாவிற்கு அறிவுரை வழங்கி, கடைசியில் சூர்யா அவருக்கு ஒரு படம் கொடுத்துள்ளார். அதுதான் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படம். இந்தப் படத்திற்காக சூர்யா கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெடுக்கிறார்.

Also Read: சூர்யா 42 படத்தின் வித்தியாசமான லுக்.. பத்து வயது குறைந்த இளமையான வைரல் புகைப்படம்

ஏனென்றால் உதவி செய்வதைக் கூட ஏனோதானோ என்று செய்ய மாட்டார் சூர்யா. இந்தப் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் 5 கெட்டப்பில் சூர்யா மிரட்டுகிறார். 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது, இந்த படம் 500 கோடி பிரீ பிஸ்னஸ் ஆகி உள்ளது.

1000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக உருவாகிக் கொண்டிருக்கும் சூர்யா 42 படம்  மூலம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை தூக்கி விட ரோலக்ஸ் முடிவெடுத்துள்ளார். நிச்சயம் இந்த படத்திற்கு பிறகு ஞானவேல் ராஜா, தயாரிப்பாளராக தன்னுடைய இடத்தை மீண்டும் பிடிப்பார். அதற்காகவே சூர்யா தன்னுடைய முழு முயற்சியையும் இந்தப் படத்திற்காக படத்திற்காக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: லியோவை மிரட்ட போகும் ரோலக்ஸ்.. சூர்யா 42-வின் வாயை பிளக்க வைக்கும் ப்ரீ ரிலீஸ் வசூல் ரிப்போர்ட்

Trending News