வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிரம்மாண்ட படத்தை எடுப்பதில் இப்படி ஒரு சூட்சமம்.. ஷங்கரின் முகத்திரையை கிழித்த தயாரிப்பாளர்

பிரம்மாண்டம் என்றாலே நமக்கு உடனே ஞாபகம் வருவது ஷங்கர் தான். ஏனென்றால் அவருடைய படத்தில் அத்தகைய பிரம்மாண்டத்தை காட்டியிருப்பார். மேலும் படத்தின் பட்ஜெட்டை போல் வசூலும் வாரி குவிக்கும். அதிலும் அவருடைய எந்திரன், 2.0 படங்கள் நல்ல வசூல் பெற்றது.

இப்போது தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். மேலும் பல வருடங்களாக கிடப்பில் போட்டிருந்த இந்தியன் 2 படத்தையும் தற்போது தூசி தட்டி படப்பிடிப்பு நடித்து வருகிறார். இந்நிலையில் ஷங்கர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also Read :ரெட் கார்டு பஞ்சாயத்து வேஸ்ட்.. ஷங்கர் முடிஞ்சு இப்போ லைக்கா கண்ணில் விரல் விட்டு ஆட்டும் புயல் நடிகர்

அதாவது ஷங்கர் பிரம்மாண்ட படத்தை எடுப்பதன் பின்னால் இப்படி ஒரு சூட்சமம் இருப்பதாக தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார். அதாவது 500 கோடி பட்ஜெட்டில் அவர் படம் எடுத்தால் அதில் 50 கோடியை திருடி விடுவார் என அப்பட்டமாக கூறியுள்ளார். இதற்காகத்தான் ஷங்கர் பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்று கூறிவருகிறார்.

இந்த விஷயம் அரசல் புரசலாக ஷங்கரின் உதவி இயக்குனரிடம் வந்ததாகவும் அந்த தகவல் கே ராஜன் இடம் வந்து சேர்ந்தது என கூறியுள்ளார். ஒரு முன்னணி இயக்குனர் மீது இவ்வாறு ஆதாரம் இன்றி குற்றச்சாட்டு வைப்பது மிகப்பெரிய தவறு என பலரும் கே ராஜனை விமர்சித்து வருகிறார்கள்.

Also Read :3 தரமான இயக்குனர்களை களமிறக்கும் ஷங்கர்.. கமலால் வந்த பிரச்சனையை சமாளிக்க இப்படி ஒரு திட்டம்

அதுமட்டுமின்றி சாதாரணமாக மல்லிகை கடை, ஜவுளி கடை போன்ற கடைகளில் கூட ஆயிரம் ரூபாய் கணக்கு குறைந்தால் கண்டுபிடித்து விடுவார்கள். ஒரு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. இதில் எல்லா கணக்கு வழக்குகளும் சரியாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு காட்சிக்கும் சம்பந்தமான செலவுகளை கணக்கு பார்த்து தான் தயாரிப்பாளர்கள் கொடுப்பார்கள், அதில் எப்படி திருட முடியும். ஒரு இயக்குனரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏதோ சொல்லனும் என்று ராஜன் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என பேசிக்கொள்கிறார்கள்.

Also Read :அதிக நாட்கள், குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படங்கள்.. விக்ரமின் படத்தை ஜவ்வாக இழுத்த ஷங்கர்

Trending News