திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

நேர்மைக்கு பெயர் போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்படி ஒரு தம்பியா? தலைகுனிய போகும் குடும்பம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவிக்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர், ஒரே மாதத்தில் ஹோட்டல் தொழிலில் லாபம் காட்டுவேன் என தனத்தின் சக்காளத்தி மல்லி இடம் சவால் விட்டிருக்கிறார்.

இதற்காக கதிர் காலையிலேயே டிபனுடன் மதிய உணவையும் சமைத்து கொடுப்பது, சுவையான பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளையும் ஹோட்டலில் அறிமுகப்படுத்து என பல முயற்சிகளை மேற்கொண்டாலும் அவருக்கு நஷ்டம் குறைகிறதே தவிர லாபம் வந்தபாடில்லை.

Also Read: யாராச்சும் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா.. மகா மட்டமாக போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்

இதனால் இன்னும் இரண்டே நாளில் ஹோட்டலில் லாபம் பார்க்க வேண்டும் என்பதால் கடைசி கடைசியாக வாடிக்கையாளர்களை நம்பி கதிர் அதிரடி முடிவை ஒன்றை எடுத்திருக்கிறார். இன்று வரும் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி இலவசமாக கொடுக்கப்படும் என அறிவிப்புப் பலகையில் எழுதி ஹோட்டலுக்கு முன் வைத்திருக்கிறார்.

இதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் ஹோட்டலில் குவிந்து பிரியாணியை இலவசமாக வாங்கி சாப்பிடுகின்றனர். சாப்பிட்ட பிறகு அவர்களால் இயன்ற பணத்தை உண்டியலில் போட வேண்டும் என்பதற்காக கல்லா முன்பு ஒரு உண்டியலை வைக்கிறார். சாப்பிடும் அனைவரும் அந்த உண்டியலில் எதுவும் போடாமல் கிளம்பி விடுகின்றனர்.

Also Read: பெரிய மைனாவுக்கு வலை விரித்த பிக்பாஸ் டீம்.. தானாக சிக்கிய சின்ன மைனா

இதைப் பார்த்ததும் மல்லி கேலி கிண்டல் செய்கிறார். ஆனால் கடைசியாக இருக்கும் சில பேர் மட்டும் மனசாட்சிக்கு நேர்மையாக பிரியாணிக்கு தகுந்த பணத்தை அந்த உண்டியலில் போட்டு கதிர் எடுத்த முடிவு சரியானது தான் என காண்பித்து இருக்கின்றனர்.

இதுஒருபுறமிருக்க கண்ணன் பைனான்ஸ் ஆபிஸில் வேலை செய்வதால் மேலதிகாரி லஞ்சமாக பெரும் பணத்திற்கு கண்ணனும் உறுதுணையாக நிற்கிறார். இதற்காக கண்ணனுக்கும் லஞ்சத்தில் இருந்து ஒரு தொகையை கொடுக்கப்படுகிறது. ஆனால் அதை கண்ணன் ஏற்க மறுக்கிறார்.

Also Read: புத்தம்புது சன் டிவி சீரியலால் விரட்டியடிக்கப்பட்ட விஜய் டிவி.. இணையத்தைக் கலக்கிய டிஆர்பி ரேட்டிங்!

ஒரு கட்டத்தில் கண்ணன் அதை வாங்கி குடும்பத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளார். நேர்மைக்கு பெயர் போன பாண்டியன் ஸ்டோர்ஸ் தம்பியா! என கண்ணனை பார்த்து சின்னத்திரை ரசிகர்கள் கரித்து கொட்டுகின்றனர்.

Trending News