மன்சூர் அலிகான் ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டி வந்த நிலையில் தற்போது காமெடி நடிகராக கலக்கி வருகிறார். விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் இவரது நடிப்பு பலரையும் பிரம்மிக்க செய்தது. இவரைப் ரோல் மாடலாக வைத்து பல வில்லன் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர்.
அவ்வாறு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் தான் மன்சூர் அலிகான். லோகேஷ் தன்னுடைய படங்களில் மன்சூர் அலிகானின் குணாதிசயங்கள் உள்ள சாயலை பயன்படுத்தி இருப்பார். ஆனால் இவர்கள் இருவரும் சினிமாவில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டது இல்லையாம்.
Also Read : திமிராக மல்லு கட்டிய மன்சூர் அலிகான்.. பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கட்டும் என விரட்டியடித்த பிக் பாஸ்
இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் தளபதி 67 படத்தில் லோகேஷ் இணைய உள்ளார். இந்த படத்தில் சஞ்சய் தத், விஷால், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற முக்கிய பிரபலங்கள் வில்லனாக நடிக்க உள்ளனர். இப்படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் உள்ளனர்.
இந்த படத்தில் மன்சூர் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தளபதி 67 படத்திற்காக உடல் எடையை குறைக்குமாறு லோகேஷ் மன்சூர் அலிகான் இடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆகையால் வெறிபிடித்தது போல தற்போது மன்சூர் அலிகான் வொர்க் அவுட் செய்து வருகிறார்.
Also Read : மண்டைய போடுறதுக்குள்ள அவர் படத்துல நடிக்கணும்.. வெளிப்படையாக கூறிய மன்சூர் அலிகான்
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மிகக் குறைந்த நாட்களிலேயே 15 கிலோ மன்சூர் அலிகான் குறைத்துள்ளாராம். இப்போது 60 வயதை எட்டி உள்ள மன்சூர் அலிகான் ஒரு இளைஞனுக்கு உண்டான எனர்ஜி போல தீவிரமாக வொர்க் அவுட் செய்கிறார்.
தளபதி 67 படத்தில் பழையபடி மன்சூர் அலிகான் ஒரு மாசான வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மன்சூர் அலிகான் கதாபாத்திரத்தை செதுக்கிய உள்ளாராம் லோகேஷ். மேலும் தளபதி 67 படத்தை பற்றிய அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : தளபதி 67ல் படத்துல என்ன டம்மி பீட்சா ஆகிடுவாங்க.. ஷோகேஷ் போட்ட ஸ்கெட்சில் மிஸாகும் 5வது வில்லன் நடிகர்