சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Suchithra: மானபங்கம் செய்த தனுஷ், கெஞ்சி கதறிய கூட்டம்.. உங்க நட்புக்கு நா பலிகிடாவா? கதறும் சுசித்ரா

Suchithra: சாதுமிரண்டா காடு கொள்ளாது என்று சொல்லுவாங்க, அப்படித்தான் இப்போது பாடகி சுசித்ரா பொங்கி எழுந்து கொண்டிருக்கிறார். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்ததால் தன் வாழ்க்கை முடங்கி விட்டதாகவும் தன்னுடைய மனக்கவலையை தெரிவித்திருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த பாடகி தான் சுசித்ரா. அது மட்டும் இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் நிறைய ஹீரோயின்களுக்கு பேசியிருக்கிறார். சூரியன் எஃப் எம் சேனலில் கிட்டு மாமா சுசி மாமி, விஜய் டிவியில் காபி வித் சுசி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவரை எட்டு வருடங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்த விஷயம் என்றால் அது சுச்சி லீக்ஸ் என்னும் ட்விட்டர் பதிவு தான். பிக் பாஸ் நான்காவது சீசனில் இவரை பார்த்த போது கொஞ்சம் மன ரீதியாக குழப்பங்கள் இருப்பவர் போல தான் தெரிந்தார்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இவர் கொடுத்து வரும் பேட்டிகளில் ரொம்பவும் தெளிவான பேச்சு தெரிகிறது. சுச்சி லீக் ட்விட்டர் பதிவு போடப்பட்ட அன்று என்ன நடந்தது என்பதை நேற்றைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

அந்த சம்பவம் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஏதோ ஒரு மனக்கசப்பில் சுசித்ரா மற்றும் கார்த்திக் குமார் பிரிந்து தான் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் கணவர் என்பதால் தன்னுடைய twitter பாஸ்வேர்டை பகிர்ந்திருக்கிறார் சுசித்ரா.

கார்த்திக் குமார், தனுஷ், அனிருத் போன்றவர்கள் அன்றைய தினம் பார்ட்டி செய்ததாக சுசித்ரா சொல்லி இருக்கிறார். தெளிவில்லாத ஒரு மனநிலையில், பிரபல நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியில் வந்தால் மக்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று சோதிக்க வேண்டும் என அந்த நண்பர் கூட்டத்திற்கு தோன்றியிருக்கிறது.

இதற்காக அவர்கள் சுசித்ராவின் ட்விட்டரை பயன்படுத்தி இருப்பதாக சுசித்ரா சொல்லி இருக்கிறார். தனுஷ் என்னை மானபங்கம் செய்து விட்டார், காயப்படுத்தி விட்டார் என்று சுசித்ராவின் ட்விட்டர் பதிவில் எழுதியது தனுஷ் தான் என்று சுசித்ரா இப்போது சொல்லி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் சுசி லீக்ஸ் பதிவில் வெளியான புகைப்படங்களில் இருக்கும் செலிப்ரட்டிகள் எல்லோருமே அன்றைய தினம் அந்தப் பார்ட்டியில் இருந்திருக்கிறார்கள். அவரவர்கள் தங்களுடைய அந்தரங்க புகைப்படத்தை இந்த சோதனைக்காக கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் தான் சுசி லீக்ஸ் வெளியான போது யாருமே காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. நிதானம் வந்ததும் என்ன நடந்தது என்பது அப்போதுதான் இந்த நண்பர்கள் கூட்டத்திற்கு புரிந்து இருக்கிறது. உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சி புலம்பி இருக்கிறார்கள். அதற்கு சுசித்ரா மறுத்து விட்டதால் கார்த்திக் குமாரே அந்த பதிவை ட்விட்டரில் போட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குப் பிறகு அன்றைய தினம் இதுதான் நடந்தது என கார்த்திக் குமார் சுசித்ராவிடம் சொல்லி இருக்கிறார். இதனால் தான் சுசித்ரா கார்த்திக் குமாரை விவாகரத்து செய்ததாகவும் அந்த பேட்டியில் சுசித்ரா சொல்லி இருக்கிறார்.

Trending News