புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Suchithra: விஜய் ஆண்டனி மகளின் தற்கொலைக்கான காரணம்.. கொலை நடுங்க வைக்கும் சம்பவத்தை சொன்ன சுசித்ரா

Suchithra: எட்டு வருஷத்துக்கு முன்னாடி சுச்சி லீக்ஸ் என்னும் twitter பதிவின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் புரட்டி போட்டார் பாடகி சுசித்ரா. இப்போ அந்த ட்விட்டர் பதிவு நான் போட்டதே கிடையாது என்று சொல்லி மீண்டும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்துகிறார்.

நடிகர் தனுஷிடம் இருந்து ஆரம்பித்து தமிழ் சினிமாவில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஓரளவுக்கு தெள்ளத் தெளிவாக சொல்லி முடித்து விட்டார். கடந்த சில தினங்களாக எந்த பக்கம் திரும்பினாலும் சுசித்ரா இன்டர்வியூ பற்றி தான் பேச்சு.

அவருக்கு எதிராக சில விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை பற்றி நிறைய பேசியிருந்தார் சுசித்ரா. அப்படி ஒரு பேட்டியில் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி என்ற டாபிக்கில் ஆரம்பித்து அப்படியே விஜய் ஆண்டனி மகள் தற்கொலை பற்றி பேச ஆரம்பித்தார்.

விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12 ஆம் வகுப்பு படிக்கும் மீராவுக்கு இருந்த அதிக மன அழுத்தம் தான் இந்த தற்கொலைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சுசித்ரா இதற்கு வேறு ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்.

விஜய் ஆண்டனி மகளின் தற்கொலைக்கான காரணம்

விஜய் ஆண்டனி படங்களில் ஹீரோவாக நடிப்பதற்காக தன்னுடைய உடல் அமைப்பை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி இருக்கிறார். இதேபோன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய உடல் தோற்றத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது மீராவின் ஆசையாக இருந்திருக்கிறது.

இதை தந்தையிடம் தெரிவித்து இருக்கிறார். தந்தையும் மீரா கேட்கும்போதெல்லாம் ஒரு சில நாடுகளின் பெயர்களை சொல்லி, கண்டிப்பாக அங்கு கூட்டிட்டு போய் பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று இரவு மீரா மீண்டும் அந்த பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி பேசி இருக்கிறார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன விஜய் ஆண்டனி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி எறிந்து விட்டு பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்து வைக்க முடியாது என்று கோபமாக சொல்லிவிட்டு போய் விட்டாராம்.

அப்பாவின் இந்த பேச்சால் மனம் நொந்து போன மீரா தற்கொலை செய்து கொண்டதாக சுசித்ரா தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Trending News