செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

Suchithra: த்ரிஷா அந்த வீடியோவை ரிலீஸ் பண்ணிட்டு நல்லவங்க மாதிரி நடிச்சாங்க.. புலம்பி கதறும் சுசித்ரா

Suchithra: சென்னையை உலுக்கின மிக்ஜாம் புயலை விட அதிகமாக கோலிவுட்டை உலுக்கி பார்த்திருக்கிறது பாடகி சுசித்ராவின் இன்டர்வியூ. யாரைப் பற்றி பேசுகிறோம், எந்த விஷயம் பேசுகிறோம் என்று எதையுமே யோசிக்காமல் படப்பட என்று பட்டாசாய் வெடித்து சிதறிவிட்டார்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சுச்சி லீக்ஸ் பற்றி பேசி பரப்பரப்பை கிளப்பி இருக்கிறார். தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தொடங்கி தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கமலஹாசன், ஆண்ட்ரியா என தமிழ் சினிமாவின் பிரபலமான முகங்கள் அத்தனை பேரை பற்றியும் முகம் சுளிக்கும் அளவுக்கு கருத்துக்களை பேசி இருக்கிறார்.

அதிலும் தனுஷை நேரில் பார்த்தால் கைய கால ஒடச்சிடுவேன் என்று சொன்னதெல்லாம் கொஞ்சம் அபத்தமாக தான் இருந்தது. அதையும் தாண்டி தமிழ் சினிமாவின் கிங்காக இருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் திருமணத்திற்கு பிறகு டேட்டிங் செய்தார் என விவாகரத்துக்கான காரணம் இதுதான் என்று சொல்லி ஒரே போடாக போட்டு விட்டார்.

புலம்பி கதறும் சுசித்ரா

பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என புகழின் உச்சியில் இருந்தவர் சுசித்ரா. விஜய் டிவியில் காபி வித் சுசி நிகழ்ச்சியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. சூரியன் எஃப் எம் இல் தினமும் எட்டு மணிக்கு ஒளிபரப்பாகிய கிட்டு மாமா சுசி மாமி நிகழ்ச்சியில் இவருடைய குரலை கேட்பதற்காகவே நேயர்கள் காத்து கிடப்பார்கள்.

அப்படிப்பட்ட சுசித்ராவின் மொத்த வாழ்க்கையும் மாறியது அவர் ட்விட்டரில் சில பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய பிறகுதான். அதன் பின்னர் இந்தியாவிலேயே இருக்க முடியாமல் தான் லண்டனுக்கு சென்று விட்டதாக சொல்லி இருக்கிறார்.

ஆனால் உண்மையில் இந்த மாதிரியான விஷயத்தை செய்தது நான் இல்லை என்று அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா என இதற்கு ஒரு தனியான குரூப் இருக்கிறது என்றும், அவர்கள் பிராங்க் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை கெடுத்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

திரிஷா தான் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படத்தை வெளியிட சொல்லி அதை பிராங்கிற்காக செய்தேன் என்றும் சொன்னார் என இப்போது சுசித்ரா அந்த இன்டர்வியூவில் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே தனுஷ் மற்றும் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்று தலையில் குண்டை தூக்கி போட்ட சுசித்ரா. இப்போது த்ரிஷா மீதும் இப்படி ஒரு பழியை போட்டு இருக்கிறார். இதை எந்த அளவுக்கு உண்மை, சுசித்ராவுக்கு மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்படுகிறதா என்பதை அவருடைய குடும்பத்தார் தான் தீர விசாரிக்க வேண்டும்.

ஒரு பக்கம் இந்த இன்டர்வியூ வெளியானதிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பெயரை காப்பாற்றுவதற்காக சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். ஒரே பேட்டியில் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் கதி கலங்க செய்துவிட்டார் பாடகி சுசித்ரா.

Trending News