ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

Pantene ஷாம்பு – வைரமுத்துவுக்கு 7 அறையாக தொடரும் பிரச்சனை.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா?

கவிஞர் வைரமுத்து மீது, பலர் பல விதமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக பெண்களிடம் அவர் அத்துமீறுவார் என்று சில காலங்களுக்கு முன்பு மீ டு புகாரை சின்மயி முன்வைத்தார். இது ஒரு பெரிய புயலையே கிளப்பியது. இந்த நிலையில், பான்டீன் ஷாம்பூ தனக்கு பரிசாக வைரமுத்து கொடுத்தார், மேலும் , தவறான முறையில் தன்னை அணுகினார் என்று பாடகி சுசித்ரா சொன்னார்.

இதை தொடர்ந்து வைரமுத்து இதுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாடகி சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்க பட்டுள்ளது என்று கூறினார். தற்போது, இதற்க்கு பாடகி சுசித்ராவும் பதிலடி கொடுத்துள்ளார். “வைரமுத்து சொல்வது போல நான் எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்வதில்லை. அவரை ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில் அடைத்து பூட்டி போடுங்கள்.”

அவர் பல பேரை மெண்டல் ஆக்குகிறார். எனக்கு வைரமுத்து பரிசாக ஷாம்பு பாட்டில் தந்ததை, பல பெண்கள் கேட்டு தற்போது உஷாராக மாறி இருக்கிறார்கள். இனிமேல் அவர் பரிசு தருகிறேன் என்று கூறினால், பெண்கள் உஷாராக செல்லாமல் இருப்பார்கள். ஆகையால், நான் பேசியது தற்போது மிகவும் நல்லதாக மாறிவிட்டது.

இதை ஏன் நான் அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அன்று என்னுடன் என் பாட்டியும் இருந்தார். நான் ஒருவேளை அவர் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தால். என்னை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றிருப்பார்கள். என் கரியரே காலி ஆகி இருக்கும். இவரால் பிரச்சனையை எனக்கும் நடந்தது, சின்மயிக்கும் நடந்தது. பல பாடகிகள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் அன்றைய நிகழ்வு கடவுள் நினைத்தது என்று நான் நினைக்கிறேன். ஆகையால் அதன் பின்னர், முடிந்த மட்டும் இந்த மனிதனோடு ஒரே மேடையிலோ, ஒரே நிகழ்ச்சியிலோ இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து இருந்தேன் எனக் அவர் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் சுசித்ரா பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் இப்போதெல்லாம்.. இந்தம்மா க்கு வேற வேலை இல்ல. உண்மையிலையே இவருக்கு மனநலம் தான் பாதித்து விட்டது போல என்று மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News