வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Ajith : தேரை இழுத்து தெருவில் விட்ட சுசித்ரா.. ஃபுல் போதையில் அஜித் செய்த காரியம் 

சுசித்ரா கொடுக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயில்வான், தனுஷ், திரிஷா போன்ற பிரபலங்களை தொடர்ந்து அஜித்தையும் சர்ச்சையில் சிக்கி விட்டிருக்கிறார். அஜித் சினிமாவில் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கிறார். 

ஆனால் வெளியில் தான் அஜித் ஜென்டில்மேன், நிஜத்தில் வேறு மாறி என்பது போல் சுசித்ரா கூறி இருக்கிறார். தனது கணவர் உட்பட பலரையும் பொது வழியில் ஊடகங்களில் பேசி நாரடித்து வரும் சுசித்ரா அஜித்தை பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதை பார்க்கலாம். 

அதாவது தயாநிதி அழகிரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பாடகிகளை பாடுவதற்காக அழைப்பு விடுத்திருந்தனராம். அப்போது சுசித்ராவும் சென்ற நிலையில் அந்தப் பார்ட்டியில் அஜித் ஃபுல்லாக குடித்துவிட்டு செம போதையில் இருந்தாராம். 

அஜித்தை பற்றி மோசமாக கூறிய சுசித்ரா

அதுவும் அதிகம் மது அருந்தியது மட்டுமில்லாமல் நிறைய அழுதார். அதோடு எங்களுடன் அந்தாக்ஷி விளையாடினார். அஜித்துக்கு தங்கதாம்பாளத்தில் இருக்கும் போதை பழக்கம் இல்லை என்றாலும் நிறைய குடிப்பார்,a இதை சத்தியமாக நானே பார்த்திருக்கிறேன் என்று சுசித்ரா கூறியிருக்கிறார். 

மேலும் என்னிடம் நீ பாடிய சின்ன தாமரை பாடலுக்கு நான் மிகவும் அடிமை என்று கூறினார். அதோடு விஜய்க்கு நீ பாடல் பாடிவிட்டாய் எனக்கு பொறாமையாக இருக்கிறது என்று கூறினாராம். உடனே சுசித்ரா உங்களுக்கும் பாடல் பாடுகிறேன் என்று அந்தப் பார்ட்டில் கூறினாராம்.

மேலும் அஜித் விஜய்யின் மீது பொறாமைப்படுகிறார் என்பது போல இந்த விஷயத்தை சுசித்ரா கூறி இருக்கிறார். இவர் இவ்வாயு அஜித்தை பற்றி மோசமான கருத்துக்களை பகிர்ந்துள்ளது ஏகே ரசிகர்கள் மத்தியில் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News