ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வீரப்பனின் குடும்பத்திற்காக படத்தின் டைட்டிலை மாற்றிக்கொண்ட யோகிபாபு.. உங்களுக்கு நல்ல மனசு ப்ரோ.!

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் மற்றவர்களை சிரிக்க வைக்கும் ஒரு கில்லாடி நடிகராக வலம் வரும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, பல நல்ல திரைக்கதைகளை கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் பிரமாதமாக நடித்து வருகிறார்.

புரட்சித் திரைப்படமாக வெளிவந்த ராட்சசி பட இயக்குனர் சை.கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குனர் யாசின் இயக்கும் ‘வீரப்பன் கஜானா’ என்ற புதுப்படத்தில் யோகி பாபு யூடியூபர் வேடத்தில் தனது வித்தியாசமான நடிப்பை காட்ட உள்ளார்.

ஆனால் இந்தப் படத்தின் தலைப்பிற்கும் மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு எந்த தொடர்பும் இல்லையாம். இதனால் இந்தப் படத்தின் தலைப்பை மாற்றும்படி நடிகர் யோகிபாபுவுக்கு, வீரப்பன் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, படத்தின் தலைப்பை மாற்றுவதற்கு படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் குறிப்பாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளதாம்.

yogi-cinemapettai
yogi-cinemapettai

ஏனென்றால் படத்தின் கதை, காடுகளின் பெருமையையும் அதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும். அத்துடன் காட்டு விலங்குகளை குழந்தைகள் ரசிக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் படத்தில் யோகிபாபுடன் மொட்ட ராஜேந்திரன் கூட்டு சேர்ந்திருப்பதால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆகையால் இத்தகைய காமெடி த்ரில்லர் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Trending News