திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஆரம்பமே அக்கப்போர்.. சுதா கொங்காரா-க்கும் சிவகார்த்திகேயனுக்கு செட்டே ஆகல

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் படம் புறநானூறு. இந்த படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்கவிருந்தார். ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் இந்த படத்திலிருந்து விலகியதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கமிட் ஆனார்.

இந்த நிலையில் இந்த படத்தின் Announcement Teaser ஒன்றை வெளியிடலாம் என்று சுதா கொங்காரா விருப்பப்பட்டுள்ளார். ஆனால் அதில் சிவகார்த்திகேயனுக்கும் சுதா கொங்காரா-க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே, அக்கப்போராக உள்ளது என்றும் படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

ரெண்டு பேருக்கும் செட்டே ஆகல..

இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் மண்டை காய்ந்து போன தயாரிப்பாளர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இதை தொடர்ந்து Announcement Teaser ஷூட்டிங் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டு, பின்பு அதிலும் பிரச்சனை ஏற்பட்டது. இப்படி இருக்க எதுக்கு Announcement Teaser-லாம்.. நேரடியாக படத்தையே ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

அப்படி வரும் டிசம்பர் 21-ஆம் தேதி ஷூட்டிங்கை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்கள். அதுமட்டுமின்றி, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் அதர்வா வேற ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஒருவேளை அவர் தான் வில்லனா என்றும் கேள்வி வந்துள்ளது. ஸ்ரீலீலா இந்த படத்தில் ஹீரோயினாக கமிட் ஆனா நிலையில், இந்த படத்தின் லுக் டெஸ்ட் தற்போது முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காஸ்டிங் இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் மீது பயங்கரமான எதிர்பார்ப்புள்ளது.

Trending News