சுதா கொங்காரா அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து புறநானூறு படத்தை எடுக்க போகிறார். முதலில், இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் பாலிவுட் பக்கம் போவதால், சுதாவிடம் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை கூறியுள்ளார். அதை சுதா ஏற்க மறுத்ததால், அவர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனிடம் கதையை கூறியுள்ளார் சுதா கொங்காரா. அவருக்கு மிகவும் பிடித்துப்போக நிச்சயம் பண்ணலாம் என்று சிவகார்த்திகேயன் பச்சை கொடி காட்ட, சிபி சக்கரவர்த்தி படத்தை முடித்துவிட்டு, சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க வருகிறேன் என்று கூறினார். ஆனால் சுதா, சீக்கிரமே படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
SK கூட பிரச்சனையா?
அதற்கும் ஓகே சொல்லி இருக்கிறார் சிவா. ஆனால் சுதா, அவரது படத்துக்காக french beard கெட்டப் வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்க்கு சிவகார்த்திகேயன் முடியவே முடியாது என்று கூறியுள்ளார்.
ஏன் என்றால் அது மற்ற படங்களின் படப்பிடிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், முதலில் சுதா கொங்காராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால், இருவருக்கும் பிரச்சனையாகி படமே கான்செல் ஆகிவிட்டது என்று ஒரு சில விஷமிகள் பரப்பி விட்டனர். பிறகு விசாரிக்கும்போது தான், அப்படியான ஒரு சண்டையே நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
முதலில், இதனால் வாக்குவாதம் வந்தது உண்மை தான். ஆனால் சிவகார்த்திகேயன் கூறிய காரணத்தை சுதா கொங்காரா ஏற்று கொண்டுவிட்டார்.
இவர்களுக்குள் மனஸ்தாபமோ, பிரச்சனையோ ஏற்படவில்லை. மேலும் ஜனவரி மாதம் நிச்சயம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.