வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவை தாண்டிய சுதா கொங்கரா சம்பளம்.. வாயைப் பிளக்கும் திரையுலகம்

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் தமிழில் துரோகி மற்றும் இறுதி சுற்று படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு இவர் இயக்கிய சூரரைப் போற்று படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டைமென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். ஏர் டெக்கான் கோபிநாத் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.

Also Read : தேசிய அளவில் சூரரைப்போற்றுக்கு போட்டியாக மற்றும் ஒரு தமிழ் படம்.. யார் ஹீரோ என்ன படம் தெரியுமா.?

இப்படம் ஓடிடியில் வெளியானாலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை என 5 தேசிய விருதுகளை வாங்கி குவித்தது.

தற்போது இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை அக்ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தையும் சூர்யா தனது 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறது. இந்நிலையில் சுதா கொங்குராவின் சம்பளம் வெளியாகி கோலிவுட்டையே வாயை பிளக்கச் செய்துள்ளது.

Also Read : என்னுடைய வெற்றி ரகசியம் இதுதான்.. முதல்முறையாக பகிர்ந்துகொண்ட சூரரைப் போற்று சுதா கொங்கரா

அதாவது தமிழில் சூரரைப் போற்று படத்தை இயக்கும் போது சுதா கொங்கராவுக்கு 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஹிந்தி ரீமேக் இயக்கும் போது 25 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். தேசிய விருது பெற்றவுடன் இவரது மார்க்கெட் தற்போது உச்சத்தை பெற்றுள்ளது.

இதனால் பல முன்னணி நடிகர்கள் சுதா கொங்குரா இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர். மேலும் மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம்.

Also Read : சூரரைப் போற்று கதையை நிஜமாக்கிய சம்பவம்.. சூர்யா, சுதா கொங்கராவிற்கு குவியும் பாராட்டு!

Trending News