ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க போகும் விண்வெளி நாயகன் மகன்..

சிம்பு தற்போது thug life படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமலின் மகனாக சிம்பு நடிக்கிறார் என்பது பெருமளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒரு வருடமாக சிம்புவின் எந்த படமும் வெளியாகவில்லை. அதனால், அவர் அடுத்து எந்த படத்தில் நடிக்கிறார் என்பதே ஒரு குழப்பமாக தான் உள்ளது. இவரை பற்றிய அப்டேட் மட்டும் தான் வந்து கொண்டு இருக்கிறது.

பொதுவாக சிம்பு மீது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பல குறைகள் கூறுவார்கள். அவர் நடிப்பில் அபாரம் என்றாலும், ஒழுக்கம் இல்லை என்று சொல்லுவார்கள். ஒரு ஷூட்டிங்-க்கு சரியான நேரத்தில் வரமாட்டார், மற்றவர்கள் நேரத்தை வீணடிப்பார், சொல்லாமல் கிளம்பி போய்விடுவார் என்று குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போவார்கள்.

அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதும் குறைந்தது..இதற்க்கு இடையில், உடல் எடை அதிகரித்து அதுவும் அவருக்கு ஒரு புது ப்ராசசனையாக மாறியது. இப்படி பட்ட சூழ்நிலையில் தான் மாநாடு, படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார். அதை தொடர்ந்து அவர் நடித்த வெந்து தணிந்தது காடு படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

STR-க்கு அடித்த ஜாக்பாட்

இப்படி இருக்க, STR-க்கு அடித்த ஜாக்பாட் தான் Thug Life படம். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு மகனாக நடித்துள்ளார் சிம்பு.

இதை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வரலாற்று படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில், அது தள்ளிப்போனது. அந்த நேரத்தில் என்ட்ரி கொடுத்தார் சுதா கொங்காரா.

STR48 படத்தை சுதா கொங்காரா தான் இயக்க போகிறார். அவரது படம் என்றால் நிச்சயம் கன்டென்ட் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிவகார்த்திகேயனை வைத்து இயக்கம் புறநானூறு படத்தை முடித்த பிறகு, STR48 படத்தை சுதா கொங்காரா எடுப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.

Trending News