வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுதா கொங்கராவை ஜல்லிக்கட்டு காளையுடன் ஒப்பிட்டு புகழாரம்.. அசரவைக்கும் மாதவன் பேச்சு

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் தமிழில் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதிலும் சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய சூரரைப்போற்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இந்திய அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதை தொடர்ந்து தற்போது சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறது. மேலும் தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் மாதவன் மற்றும் சுதா கொங்கரா பங்கு பெற்றுள்ளனர். மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தை சுதா கொங்கரா தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஒரு குத்துச் சண்டை பயிற்சியாளர் அனைவரையும் மிரள செய்திருந்தார் மாதவன்.

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு தரமான என்ட்ரிகாக காத்திருந்த மாதவனுக்கு இறுதிச்சுற்று படம் வலுவாக அமைந்தது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் அந்த விழாவில் பேசிய மாதவன், சுதா கொங்கரா ஒரு ஜல்லிக்கட்டு காளை மாதிரி, நான் பணியாற்றிய இயக்குனர்களே மிகவும் பவர் ஃபுல்லா இயக்குனருக்கு என்றால் அது சுதா கொங்கரா தான் என மாதவன் பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மேலும் மாதவன் ரசிகர்கள் மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து வருகின்றனர். சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கை முடித்த கையோடு அஜித் மற்றும் சிம்பு படத்தை சுதா கொங்கரா இயக்கயுள்ளார் என்ற செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Trending News