Sudha kongara: இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் தான் சுதா கொங்கரா. இவர் கனவுப்படமான புறநானூறு படத்தை எடுக்கும் திட்டத்தில் இருந்தார். அதன்படி ஏப்ரல் மாதம் இதற்கான படப்பிடிப்பும் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் சில காரணங்களினால் படப்பிடிப்பு தாமதமானது. இந்நிலையில் ஊடகம் ஒன்று இருக்க பேட்டி கொடுத்த சுதா கொங்கரா புறநானூறு படத்தை பற்றிய சில விஷயங்களை கூறியிருந்தார். அதாவது இப்படம் என்னுடைய அரசியலை சொல்வதற்கான படம் தான்.
என்னுடைய கருத்தியல் சொல்வது மற்றும் ஒடுக்கு முறைக்கு எதிரான படமாக புறநானூறு படம் இருக்கும். மேலும் இறுதிச்சுற்றை விட 100 மடங்கு மற்றும் சூரரை போற்று படத்தை விட 50 மடங்கு எனது மனதுக்கு நெருக்கமான கதையாக புறநானூறு உள்ளது.
சுதா கொங்கராவின் புறநானூறு தள்ளிபோக காரணம்
பல்வேறு காரணங்களினால் புறநானூறு படம் இப்போது தள்ளி போகும் சூழல் உருவாகி இருக்கிறது. ஆனால் நிச்சயமாக அந்தப் படத்தை நான் எடுப்பேன் என்றும் சுதா கொங்கரா அந்த பேட்டியில் உறுதி அளித்திருக்கிறார்.
புறநானூறு படத்தில் ஆரம்பத்தில் சூர்யா, தனுஷ் என பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. கடைசியில் சிவகார்த்திகேயன் அந்த கதையில் தேர்வாகி உள்ளதாகவும் தகவல் வெளியானது. சுதா கொங்கராவின் ரசனை மற்றும் இயக்கம் தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்போதைக்கு புறநானூறு தாமதம் ஆனாலும் அதுவும் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைதான் உள்ளது. நாம் வியந்து பார்க்கும் அளவுக்கு கண்டிப்பாக புறநானூறு படத்தை மிகவும் அழகாக சுதா கொங்கரா கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
சூரரைப் போற்றால் மார்க்கெட்டை உயர்த்திய சூர்யா
- சுதா கொங்காரா கூப்பிட்டும் மறுத்த இளம் ஹீரோ
- ஒரு வழியா வாடி வாசலுக்கு கிடைத்த நல்ல செய்தி
- தீப்பிழம்பிற்கு நடுவில் உருமாறி நிற்கும் சூர்யா