இனியாவின் காதலால் கோபி உடன் கூட்டணி போட போகும் சுதாகர்.. ஏமாறப்போகும் பாக்யா, ஈஸ்வரி வைக்கும் செக்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் பொறுத்தவரை எப்பொழுது முடிய போகிறது என்றுதான் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அதில் சொல்லும் படியான கதைகள் எதுவும் இல்லை, விறுவிறுப்பான காட்சிகளும் இல்லை. ஆனாலும் ஏதாவது ஒரு கதையை திணித்துக் கொண்டு இழுத்து அடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது புதுசாக பாக்யாவின் ஹோட்டல் எதிரி என்ற வகையில் சுதாகர் என்பவர் நுழைந்து இருக்கிறார். இவருடைய ஹோட்டல் தான் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாக்யாவின் ஹோட்டலை விலை பேசிக்கொண்டு வருகிறார்.

ஆனால் பாக்கியா என்னுடைய ஹோட்டலை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன், தரவும் மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி அவமானப்படுத்தி விடுகிறார். இதனால் பாக்கியவை எப்படி நம் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று யோசித்த சுதாகர் கோபி மூலமாக காய் நகர்த்தப் போகிறார்.

கோபியும் சுதாகர் பேச்சுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற காரணத்திற்காக இனியா மூலமாக சுதாகர் இறங்கப் போகிறார். அதாவது கோபி மற்றும் ஈஸ்வரி, இனியா ஆசைப்பட்ட மாதிரி படித்து தற்போது ஒரு நல்ல வேலையில் சேர்ந்து விட்டார்.

அதனால் இனி கல்யாண வேலைகளை பார்க்கலாம் என்று முடிவு பண்ணி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது கோபி என் பொண்ணுக்கு பெரிய இடமாகவும், நல்ல மாப்பிள்ளையாகவும் பார்த்துக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் பண்ணி விட்டார்.

அந்த வகையில் சுதாகர் அவருடைய பையனுக்கு இனியாவை கட்டி வைத்து பாக்கியாவிடமிருந்து ஹோட்டல் அபகரித்து விடலாம் என்று பிளான் பண்ணப்போகிறார். மேலும் இனியாவின் கல்யாணத்தால் பாக்யாவின் ஹோட்டலை அபகரிக்க நினைக்கும் சுதாகரின் பிளான் தெரியாமல் பாக்கியா ஏமாறப்போகிறார். ஆனால் நிச்சயம் எழில் இனியா இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் ஏதாவது ஒரு ட்விஸ்ட் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

Leave a Comment