வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

எனக்கு வழிகாட்டி இவர்தான்.. வெளிப்படையாக கூறிய சுஹாசினி

கமல் தான் வழிகாட்டி கூறுகிறார் சுகாசினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் கமல்ஹாசன். சினிமா ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கம் டிவி சேனல் தொகுப்பாளராக ஒரு பக்கம் என படு பிசியாக வலம் வருகிறார் கமல்ஹாசன். உலக நாயகன் கலையுலக ஆண்டவர் என பலதரப்பட்ட ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் இயக்குனர் தயரிப்பாளர் பாடகருமான கமல் ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் பிக்பாஸ் விக்ரம் இந்தியன் 2 என படுபிசியாக மாறியுள்ளது உலகநாயகனின் பயணம் கொரனா ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பிறகு.ஷங்கர் வடிவேலு பிர்சசினை முடிவுக்கு வரேவே இந்தியன் 2 தயாராகும் நேரம் கூடி வந்துள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் படத்திற்கான அடுத்தடுத்த பணிகள் துவங்கியுள்ளன.

சமீபத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையும் ஔிப்பதிவாளருமான சுஹாசினி தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனோடு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து. அதில் தனது சித்தப்பா தான் இன்ஸ்பிரேசன் என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் சினிமாவில் ஔிப்பதிவாளராகவும் நாயகியாகவும் வலம் வந்தவர் நடிகை சுஹாசினி.

kamal haasan
kamal haasan

ராஜாபார்வை, ஜானி,மெட்டி நண்டு, மீண்டும் கோகிலா போன்ற படங்களில் துணை ஔிப்பதிவாளராகவும் பணியாற்றியவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. நடிகர் சாருஹாசன் மகளான இவர் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

இப்போதும் தெலுங்கில் இரு படங்கள் நடித்துக்கொண்டு இருக்கும் சுஹாசினி தனது இன்ஸ்டா பக்கத்தில் கமல் பற்றி பதிவிட்ட புகைப்படங்களை உலக நாயகன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படியாக சுகாஸினி இன்ஸ்டாவில் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் இன்ஸ்டா முகப்புத்தகம் டுவிட்டர் என பரவி வருகிறது சில யூடியூப் சேனல்களும் இந்த புகைப்படம் குறித்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றன.

Trending News