வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நடிகைகள் என்றாலே ரஜினிக்கு ஆகாது..அயன் லேடியிடம் மட்டும் காட்டும் நெருக்கத்தை புட்டு புட்டு வைத்த சுஹாசினி

இன்றைக்கும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பல படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் படங்கள் என்றாலே மக்களின் எதிர்பார்ப்பு அதிகம். இருப்பினும் அயன் லேடியிடம் மட்டும் இவர் ஜாலியாக பேசுவார் என்ற விஷயத்தை புட்டு புட்டு வைத்துள்ளார் சுஹாசினி.

ஆரம்ப காலத்தில் வில்லனாக உருவெடுத்து அதன் பின் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் தான் ரஜினி. அவ்வாறு இருப்பின் ராதா, அம்பிகா, குஷ்பூ, ராதிகா, சுஹாசினி ஆகிய முக்கிய கதாநாயகிகளோடு நடிக்கும் வாய்ப்பு இருந்தது.

Also Read: பல வருட சினிமா ட்ரெண்டை மாற்றிய 5 இயக்குனர்கள்.. அவெஞ்சர்ஸையே மிரள வைத்த ரஜினி

இருப்பினும் இவர் யாரிடமும் பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுஹாசினி இன்டர்வியூ ஒன்றில் கூறுகையில் ரஜினி பெண்களிடம் அதிகமாக பேச மாட்டார். அவர் ஒரு ஞானி என்றும் பெண்களிடம் யோகி மாதிரி நடந்து கொள்வார் என்றும் கூறினார்.

அவ்வாறு இருக்க அயன் லேடி என அழைக்கப்படும் ராதிகாவிடம் மற்றும் பேசி சிரிப்பார் என்ற உண்மையை உடைத்தார். இதைத்தொடர்ந்து ராதிகாவிடம் இதன் ரகசியத்தை கேட்டறிய கேள்வி முன் வைக்கப்பட்டது.

Also Read: லால் சலாம் ரஜினியின் கேரியரில் முக்கிய படம்.. கதையை லீக் செய்த பயில்வான்

அதற்கு நானும் ரஜினியும் ஹிந்தி பட ஷூட்டிங்கிற்கு ஒன்றாக செல்வோம். மேலும் காலை 9 மணிக்கே மேக்கப் உடன் சென்று விடுவோம் ஆனால் ஷூட்டிங் 12 மணிக்கு தான் ஆரம்பமாகும். இந்த இடைப்பட்ட நேரங்களில் நானும் அவரும் பேசிக்கொள்வது வழக்கம்.

மேலும் பல விஷயங்களை நானும் அவரும் பகிர்ந்து கொள்வோம் அவ்வாறு எங்களின் நட்பு ஆரம்பித்தது. அதை தொடர்ந்து இன்று வரை அவர் என்னிடம் எதையும் மறைக்க மாட்டார். நானும் அவரும் அரட்டை அடித்த அந்த நாட்கள் என் நினைவில் இருக்கிறது. மேலும் யாருக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறினார் ராதிகா.

Also Read: விசுவாசத்தை காட்ட ரஜினியை அவமானப்படுத்திய ஆச்சி.. பெருந்தன்மையை காட்டி கூனி குறுக வைத்த சூப்பர் ஸ்டார்

 

Trending News