வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மணிரத்னத்தை விட அதிகம் சம்பாதிக்கும் சுஹாசினி.. இந்த மொக்க பேட்டிக்கு இத்தனை லட்சமா.?

Manirathnam-Suhasini: பொன்னியின் செல்வனுக்கு பிறகு மணிரத்தினம் இப்போது கமலுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஏற்கனவே இது பற்றிய அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது உலக நாயகனுக்காக கதையை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம் மணிரத்னம்.

அது மட்டுமின்றி இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில் இந்த இரண்டு நடிப்பு அரக்கர்களின் கூட்டணியை காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி இப்போது சோசியல் மீடியாக்களில் அதிக அளவில் கல்லாகட்டி வருகிறாராம்.

Also read: பொன்னியின் செல்வனால் அழிந்த மணிரத்னம்.. கஞ்சத்தனமாக இருந்து வரலாற்றை மாற்றிய கேவலம்

இன்னும் சொல்லப்போனால் மணிரத்னம் சம்பாதிப்பதை விட இவர்தான் அதிகம் சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலை தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒவ்வொரு ஊரிலும் தான் சந்திக்கும் மக்கள் பற்றியும் அந்த ஊரின் சிறப்புகள் பற்றியும் அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இதுதான் இப்போது மீடியாக்களில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அவர் சோசியல் மீடியா சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அதன்படி அண்மையில் இவரை நடிகை சுஹாசினி பேட்டி கண்டிருந்தார். இது பலரும் எதிர்பாராதது தான். இருவரும் காரில் சென்றபடி எடுக்கப்பட்ட அந்த பேட்டியில் சுஹாசினி பல்வேறு விதமான கேள்விகளை முன் வைத்தார்.

Also read: அரவிந்த்சாமி படத்தில் நடிக்க மறுத்த நடிகை.. அக்கடதேசம் வரை பரவிய மணிரத்னம் புகழ்

அதாவது நீங்கள் முதன் முதலில் ஓட்டிய வண்டி என்ன, போலீஸ்காரரிடம் மாட்டி இருக்கிறீர்களா என பல கேள்விகளை கேட்டார். அதை தொடர்ந்து தன்னுடைய வீட்டிற்கும் அவரை அழைத்துச் சென்று உபசரித்தார். இதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 20 லட்சம்.

இதுதான் பலரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த மொக்கை பேட்டிக்கு இவ்வளவா என்று ஆச்சரியமாக இருந்தாலும் இப்படியே போனால் சுஹாசினி, மணிரத்னத்தை மிஞ்சும் அளவுக்கு சம்பாதித்து விடுவார் என்று பலரும் கிண்டலாக பேசி வருகின்றனர்.

Also read: விழி பிதுங்கிய மணிரத்னம்.. கடைசி நேரத்தில் தூக்கி விட்ட கமல்

Trending News