திங்கட்கிழமை, பிப்ரவரி 24, 2025

பழனிவேலுவின் சந்தோசத்தை பறித்த சுகன்யா, பாண்டியனின் அராஜகம்.. கனவு கோட்டையில் தத்தளிக்கும் ராஜி கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனாவின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் இரவு முழுவதும் ஆஸ்பத்திரியிலிருந்து பார்த்துக் கொள்வதற்கு செந்தில் இருக்கிறார். அத்துடன் செந்திலுக்கு துணையாக கதிரும் தங்கி விடுகிறார். ஆனாலும் இந்த விஷயத்தை ராஜிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக கதிர் வாய்ஸ் மெசேஜில் சொல்கிறார்.

அப்படியே இரண்டு பேரும் பேசிய நிலையில் ராஜி கொடுத்த கிஃப்ட்டை எடுத்துக் கொண்டதாகவும், அதில் தான் பணத்தை வைத்திருக்கிறேன் என்பதையும் சொல்கிறார். இப்படியே இவர்கள் பேசி போன் பண்ணியும் பேசி கொள்கிறார்கள். அடுத்ததாக பழனிவேலு தூங்க வந்த நிலையில் சுகன்யா நான் கோவிலுக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அதுக்கும் நீங்கள் வரவில்லை சாயங்காலம் படத்துக்கு போகலாம் என்று நினைத்தேன் அதற்கும் நீங்கள் கூட்டிட்டு போக தயாராக இல்லை என்று வழக்கம்போல் சண்டை போட்டு பழனிவேல் நிம்மதியே இல்லாமல் தவிக்கும்படி சுகன்யா கடுமையான வார்த்தைகளாக சண்டை போட்டு விட்டார். பிறகு சுகன்யா என்ன சொன்னாலும் அதற்கு எதிர்த்து பேசாமல் சரி சரி என்று சொல்லி தலையாட்டி விட்டார்.

ஆனாலும் பழனிவேலு தூக்கத்தில் குறட்டை விடுகிறார் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சுகன்யா பாதி தூக்கத்திலேயே எழுப்பி குறட்டை விடக்கூடாது என்று சொல்லி கட்டிலில் இடமும் இல்லை என சொல்லியதால் பழனிவேலு கீழே படுத்திவிட்டார். இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் குடிக்க வந்த சரவணன் காதில் ஏதோ சண்டை போடுவது போல் கேட்டுவிட்டது.

இந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி வழக்கம் போல் பழனிவேலு கடைக்கு போய்விட்டார். ஆனாலும் அங்கே சரியாக வேலை பார்க்க முடியாமல் நன்றாக தூங்கி விட்டார். அந்த நேரத்தில் செந்தில் வந்து மாமாவை பார்த்ததும் என்னாச்சு ஏன் இப்படி தூங்குகிறார் என்று அங்கே இருக்கும் தாத்தாவிடம் கேட்கிறார். உடனே அவரும், கல்யாணம் ஆனதிலிருந்து பழனிவேல் இப்படித்தான் இருக்கிறான் என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் பாண்டியன் வந்ததும் இவன் என்ன இப்படி தூங்குகிறான், வேலையில் கவனம் இல்லை பொறுப்பும் இல்லை என்று திட்ட ஆரம்பித்துவிட்டார். பிறகு செந்தில், பழனிவேலுவை எழுப்புகிறார். பதறி எழுந்த பழனிவேலு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்த நிலையில் பாண்டியன், பழனிவேலுவின் நிலைமை தெரியாமல் வழக்கம்போல் திட்டி விடுகிறார்.

பிறகு செந்தில், பழனிவேலுவை டீ குடிப்பதற்காக கூட்டிட்டு போகிறார். அங்கே சரவணன் வந்து நிலையில் அத்தைக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பழனிவேலு முழிக்கிறார். எந்தவித கவலையும் இல்லாமல் நக்கலும் நையாண்டியும் பண்ணி சந்தோசமாக இருந்த பழனிவேலு வாழ்க்கைக்குள் சுகன்யா வந்த பிறகு மொத்த சந்தோஷமும் பறிபோய் விட்டது.

இதனை தொடர்ந்து ராஜி மற்றும் கதிர் சைக்கிளில் காலேஜ்க்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது சைக்கிள் பஞ்சர் ஆன நிலையில் ராஜி இஎம்ஐ மூலம் ஒரு பைக் வாங்கலாம் என்று சொல்கிறார். உடனே ராஜி கதிர் இருவரும் சேர்ந்து அடுத்தடுத்து என்ன எல்லாம், எப்படி இருக்க போகிறோம் என்று கனவு கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் இன்னும் இவர்களுடைய காதலை மட்டும் தான் வெளியே சொல்லவில்லை மத்தப்படி இவர்கள் மனசார வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

Trending News