Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனின் கஞ்சத்தனத்தால் குடும்பமே சிதற போகிறது. அதாவது பையன்களுடன் இருக்கும் கண்டிப்பையும் தாண்டி மருமகள்கள் வந்த பிறகும் அப்படியே இருப்பது தான் சில சிக்கல்களுக்கு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் மகன்கள் மற்றும் மருமகள்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணினாலும் பழனிவேலுவை கட்டிட்டு வந்த சுகன்யா, நான் ஏன் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்.
உங்க அண்ணன்கள் தான் நல்ல பணம் வசதியுடன் இருக்கிறார்கள், உங்களுக்கும் அதில் பங்கு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது எதற்காக இங்கே இருந்து கொண்டு கஷ்டப்படணும் என்று பழனிவேலுவை பார்த்து சுகன்யா கேட்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி ஒரு படத்துக்கு கூட போக முடியாமல் கஞ்சத்தனமாக இருந்ததால் பழனிவேலுவிடமிருந்து சண்டை போட்டு பாதிலேயே வீட்டிற்கு வந்து விட்டார்.
இதனால் பாண்டியன் வீட்டில் என்ன சொல்வது என்று தெரியாமல் பழனிவேலு சின்ன சின்ன காரணங்களை சொல்லி சமாளித்து விடுகிறார். ஆனாலும் பழனிவேலுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை கதிர் புரிந்து கொண்டார். அதன்படி மொட்டை மாடியில் தனியாக இருக்கும் பழனிவேலுவை சந்தித்து பேசலாம் என்று கதிர் செந்தில் மற்றும் சரவணன் போகிறார்கள்.
அப்படி பேசிய பொழுதும் பழனிவேலு, சுகன்யாவை பற்றி எதுவும் சொல்லாமல் சமாளித்து விடுகிறார். பிறகு பழனிவேலு, நாம் அனைவரும் இங்கே மொட்டை மாடியில் தூங்கிக் கொள்ளலாமா என்று கேட்கிறார். கொஞ்சம் சிரித்து பேசிவிட்டு பழனிவேலு எனக்கு தூக்கம் வருகிறது என்று சொல்லி தூங்கி விடுகிறார். அத்துடன் கதிர், செந்தில் இடம் மாமாவுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்ன என்று கண்டுபிடிக்கணும் என்று செந்திலிடம் சொல்கிறார்.
செந்தில் நான் விசாரித்து சொல்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். பிறகு சரவணன், மாமாவுக்கு எந்த பிரச்சினையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை, அவர் சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று சொல்கிறார். அத்துடன் தங்கமயில் தனியாக தூங்க பயப்படுவாள் நான் கீழேயே போய் தூங்கிக் கொள்கிறேன் என்று போய்விடுகிறார். அந்த சமயத்தில் பாக்கியம், தங்கமயிலுக்கு போன் பண்ணி வேலைக்கு போகாமல் இருப்பதற்கு ஒரு ஐடியா கொடுக்கிறார்.
அதாவது உன் குடும்பத்தில் இருந்து நீ வேலைக்கு போகாமல் தப்பிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. சீக்கிரம் ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்டால் யாரும் உன்னை வற்புறுத்தி வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். நீயும் அந்த குழந்தையை பார்த்துக்கொண்டு உன்னுடைய வாழ்க்கை வாழலாம் என்று ஐடியா கொடுக்கிறார். அதன்படி ரூம்குள் வந்த சரவணன், தங்கமயில் இடம் குழந்தையை பற்றி பேசி சந்தோஷப்பட்டு கொள்கிறார்.
அந்த வகையில் தங்கமயிலுக்கும் இதுதான் ஒரு வழி என்பதால் பாக்கியம் சொன்னபடி கேட்கப் போகிறார். அடுத்ததாக அரசி மற்றும் குமரவேலு எதிர்த்து வீட்டில் நின்று கொண்டே சைகையால் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை சுகன்யா கவனித்த நிலையில் குமரவேலுவிடம் நடக்கட்டும் உன்னுடைய காதல் திருவிளையாடல் என்று சொல்கிறார். அதற்கு குமரவேலு எங்க எதுக்கெடுத்தாலும் பயப்படுற, இப்ப கூட சினிமாக்கு வா என்று கூப்பிடுகிறேன். ஆனால் நோ சொல்கிறாள் என்று சுகன்யாவிடம் சொல்கிறார்.
அதற்கு சுகன்யா, அதெல்லாம் நான் சமாளித்து சினிமாவிற்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்கிறார். அதன்படி அரசிடம் நீ காதலித்து கல்யாணம் பண்ணால்தான் இந்த இரண்டு குடும்பமும் ஒற்றுமையாக இருப்பார்கள். அதனால் உன்னுடைய காதலுக்கு நான் பச்சைக்கொடி காட்டுகிறேன் என்று சொல்லி சினிமாவுக்கு போகலாம் என அரசி மனசை மாற்றி விடுகிறார். அரசியும் நீங்கள் வந்தால் எனக்கு ஓகே என்று சொல்லி சினிமாவிற்கு போவதற்கு தயாராகி விட்டார்.
அந்த நேரத்தில் மீனா வந்து விடுகிறார். அவ்வப்போது மீனாவுக்கு இவங்க மீது ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்த வகையில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காத படி பாண்டியன் வீட்டுக்கு காவலாக மீனா இருந்து எல்லா விஷயத்தையும் சரி செய்து விடுவார். ஆனால் அதற்குள் இந்த சுகன்யா சில அரங்கேற்றத்தை நடத்தி குமரவேலுக்கு அரசியை கட்டிவைத்து விடுவார்.