80 காலகட்டத்தில் கொடிக்கட்டி பறந்த பிரபல நடிகை தான் சுலக்ஷனா. 18 வயதிலேயே திருமணம் முடிந்து விட்டாலும், கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற்றவர்.
மூன்று வயதிலேயே காவியத் தலைவி என்ற படத்தில் குழந்தை கதாபாத்திரமாக நடித்தவர். பாக்யராஜ் இயக்கத்தில் ‘தூறல் நின்னு போச்சு’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் கிடைத்தது.
இவ்வளவு படங்களில் நடித்திருந்தாலும் இன்றும் பேசக்கூடிய கதாபாத்திரமாக இருப்பது ‘சிந்து பைரவி’ படம் தான் நிலைத்து நிற்கிறது. கே பாலச்சந்தர் இயக்கத்தில், சிவகுமார் நடித்த சிந்து பைரவி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாக பார்க்கப்படுகிறது.
சினிமா வாழ்க்கை ஒருபுறமிருந்தாலும், திருமண வாழ்க்கையில் அவருக்கு கொடுத்து வைக்க வில்லை. இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் மகனான கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டாராம்.
இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளது சில காலங்களுக்குப் பின்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர் என்பதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
![sulakshana](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/06/sulakshana.jpg)
தன்னுடைய பிள்ளைகளை தனி மரமாக நின்று வளர்த்து கரை சேர்த்து விட்டாராம். 12 வருடங்களுக்கு பின் சுலக்ஷனா சாதனா என்ற சீரியலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.