தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பல தயாரிப்பாளர்களும் சிவகார்த்திகேயனை வைத்து படங்கள் தயாரிக்க முன் வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் படங்களில் பெரிதும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. ஆனால் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பெரிய வசூல் பெறாமல் சற்று சரிவை சந்தித்தன.
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படங்கள் அனைத்தும் வெளிவராமல் தட்டுத்தடுமாறி வருகின்றன. டாக்டர் திரைப்படம் பல மாதங்களுக்கு முன்பே திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு OTT தளத்தில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது வரை டாக்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது பலருக்கும் தெரியாமலேயே உள்ளது. திமுக ஆட்சி வந்தால் திரைத்துறையில் அதிகமான படங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும். இதனால் பல தயாரிப்பாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகியதாக பல வருடங்களுக்கு முன்பு பல தகவல்கள் வெளியாகின. ஆனால் பல வருடங்கள் பிறகு தற்போதுதான் திமுக ஆட்சியை பிடித்துள்ளது.
அதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் அடியாக சிவகார்த்திகேயனை வைத்து 5 படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உறுதியானால் அடுத்தடுத்து பல நடிகர்களின் படங்களும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர் நிலை என்னவாக போகிறது என சினிமா வட்டாரத்தில் பலரும் கூறி வருகின்றனர்.