சிவகார்த்திகேயனின் மார்க்கெட் இப்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது கமலின் தயாரிப்பில் அவர் நடிப்பதும் அவருக்கான ஒரு முன்னேற்றமாக இருக்கிறது. இது இப்படி இருக்க அவரைச் சுற்றி சில நெகட்டிவ் விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கும் அவர் தான் முழு பொறுப்பாக இருக்கிறார்.
அந்த வகையில் இப்போது அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ஓவர் ஆட்டம் காட்டியதால் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார். அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் முத்தையாவிடம் பேசி சிவகார்த்திகேயனை கிராமத்து கதையில் நடிக்க வைக்க சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருந்தது.
அதற்காக இயக்குனருக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளமும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் சிவகார்த்திகேயன் முத்தையாவிடம் இதுவரை கதையை கேட்கவில்லையாம். தயாரிப்பு தரப்பும் அவரிடம் கதையை கேளுங்கள் என்று பலமுறை கூறியிருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஆட்டம் காட்டி வந்திருக்கிறார்.
இப்படியே இரண்டு வருடம் கழிந்த நிலையில் இப்போது முத்தையாவின் சம்பளம் 6 கோடியாக உயர்ந்திருக்கிறது. இனிமேல் சிவகார்த்திகேயன் கதையை கேட்டாலும் இந்த சம்பளத்தை தான் சன் பிக்சர்ஸ் கொடுத்தாக வேண்டும். தேவையில்லாமல் இப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என்று தயாரிப்பாளர் நொந்து போய் இருக்கிறாராம்.
சிவகார்த்திகேயன் சரி என்று கூறியதால் தான் முத்தையாவிடம் பேசி இருக்கிறார்கள். ஆனால் இப்போது அவர் இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் டீலில் விட்டு இருக்கிறார். இதனால் கடுப்பான சன் பிக்சர்ஸ் அவருக்கு சரியான நேரத்தில் ஒரு செக் வைத்திருக்கிறது. அதாவது மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு குடைச்சல் கொடுக்கும் விதமாகத்தான் ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவெடுத்து இருக்கிறது. அதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ள நிலையில் மாவீரன் டீம் தான் இப்போது செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கிறார்கள். ஏற்கனவே ரிலீஸ் தேதியில் பல மாற்றங்கள் செய்து இப்போது தான் ஒரு வழியாக அறிவிக்கப்பட்டது. அதிலும் இப்படி ஒரு சிக்கல் வந்திருப்பது சிவகார்த்திகேயனை கொஞ்சம் பதற வைத்திருக்கிறது.