புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Sun Pictures: அஜித் தெறித்து ஓடும் அளவிற்கு கண்டிஷன் போட்ட சன் பிக்சர்ஸ்.. சிறுத்தை சிவா படத்துக்கு வந்த ஆப்பு

கங்குவா படமே இன்னும் முடிந்தபாடு இல்லை அதற்குள் சிறுத்தை சிவா, அஜித் படம் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே அஜித் மற்றும் சிவா இருவரும் போனிலேயே அடுத்த ப்ராஜெக்ட் பண்ணுவதற்கான ஐடியாக்களை பிளான் செய்கின்றனர்

அஜித்தே சிறுத்தை சிவாவிடம், கங்குவா படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு வாருங்கள் என அவசரப்படுகிறார். இந்த படத்தை ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக முடிவாகிவிட்டது. குட் பேட் அட்லி படத்துக்கு பின்னர் சிறுத்தை சிவா கூட்டணி ரெடி ஆகிறது.

சிறுத்தை சிவா படத்துக்கு வந்த ஆப்பு

இப்பொழுது சன் பிக்சர்ஸ் இந்த படத்திற்கு பல கண்டிஷன்கள் போட்டு வருகிறது. எல்லாமே அஜித்துக்கு எதிராகவே இருக்கிறது. குறிப்பாக அஜித் இந்த படத்திற்காக ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். அதை கம்மி பண்ணும்படி சன் பிக்சர்ஸ் கூறுகிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் பிரமோஷனுக்காக அஜித்தை இரண்டு நாட்கள் ஒதுக்க சொல்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக விஜய்,நெல்சன், பீஸ்ட் படத்திற்கு கொடுத்தது போல் ஒரு நிகழ்ச்சி பண்ண வேண்டுமாம். இதற்கு அஜித் சம்மதிக்கும் பட்சத்தில் படம் பண்ணலாம் என்று சன் பிக்சர்ஸ் ஒரு குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறது. இது அஜித் விஷயத்தில் நிச்சயமாக நடக்காது.

சிறுத்தை சிவா படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். அஜித் இதை 100% நிராகரித்து விடுவார். அவரை மொத்தமாய் சன் பிக்சர்ஸ் தன் வழிக்கு கொண்டு வருவதற்கு திட்டம் போடுகிறது. இந்த பேச்சுவார்த்தை அஜித் காதுகளுக்கு சென்று விட்டதா என்று தெரியவில்லை.

Trending News