செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கொக்கு போல் காத்திருந்த சன் பிக்சர்ஸ்.. பட்ட நாமம் போட்ட விஜய், ஆஸ்தான தயாரிப்பாளருக்கு ஓகே சொன்ன தளபதி-69

Vijay-Sun Pictures: லியோ படத்தை முடித்துக் கொடுத்துள்ள விஜய் அடுத்ததாக தளபதி 68 அவதாரத்திற்கு தயாராகி விட்டார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வேற லெவல் ஸ்கிரிப்ட்டுடன் தயாராகும் இப்படம் பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்ததாக தளபதி 69 படத்திற்கான வேலையும் ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் இந்த படத்தையும் லியோ தயாரிப்பாளர் லலித் தயாரிப்பதற்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறாராம். விஜய்யின் ஆஸ்தான தயாரிப்பாளராக இருக்கும் இவர் தற்போது லியோவில் செய்த வரவு செலவு அனைத்தும் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது.

Also read: வந்தாச்சு காவாலா முழு HD வீடியோ பாடல்.. அடுத்த வசூலுக்கு அடி போட்ட சன் பிக்சர்ஸ்

அதிலும் சிந்தாமல் சிதறாமல் லாபம் பார்ப்பதில் இவர் பயங்கர கில்லாடி. எப்படி என்றால் நா ரெடி பாடலுக்காக போடப்பட்ட செட் அனைத்தையும் காய்லான் கடைக்கு போட்டு ஒரு நல்ல லாபத்தை லலித் பார்த்து விட்டாராம். இப்படி அனைத்தையும் திட்டமிட்டு சரியான பட்ஜெட்டை போட்டு அவர் படம் எடுக்கிறார்.

அது மட்டுமல்லாமல் விஜய்க்கும் இவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. அதன் காரணமாகவே தற்போது தளபதி 69 படம் லலித் கைக்கு சென்று இருக்கிறது. இதனால் சன் பிக்சர்ஸ் தான் ஏமாந்து போயிருக்கிறார்கள்.

Also read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

ஏனென்றால் அந்த நிறுவனம் தான் விஜய்யுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று கொக்கு போல் காத்திருந்தது. அதற்கேற்றார் போல் அட்லியுடன் சன் பிக்சர்ஸ் ஒப்பந்தம் போட்டு விட்டதாகவும் அதில் விஜய் தான் ஹீரோ என்றும் தகவல்கள் மீடியாவில் வெளிவந்தது.

ஆனால் அது உண்மையா வதந்தியா என்று தெரியாத நிலையில் தளபதி 69 பட வாய்ப்பு சன் பிக்சர்ஸ் கையை விட்டு சென்றிருக்கிறது. இவ்வாறாக தன்னிடம் கால்சீட் கேட்டுக் கொண்டிருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பட்ட நாமம் போட்டு தன் ஆஸ்தான தயாரிப்பாளருக்கு ஓகே சொல்லி இருக்கிறார் விஜய்.

Also read: வர்மனை ஃபேமஸ் ஆக்கிவிட்ட வாரிசு நடிகர்.. அந்த ரெண்டு படத்தில் நடித்ததால் விநாயகத்துக்கு அடித்த ஜாக்பாட்

Trending News