புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சூப்பர் ஸ்டார் சம்பளத்தில் கிள்ளி கொடுத்த சன் பிக்சர்ஸ்.. ஜெயிலர் படத்தில் விஜய் வில்லன் வாங்கிய சம்பளம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் மீதமுள்ள 25% படப்பிடிப்பு விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் டாப் ஹீரோக்களின் சம்பளம் 100 கோடியை தாண்டி அதிகமாக உள்ளது. ஆனால் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் தன்னுடைய 100 கோடி சம்பளத்திலிருந்து ஜெயிலர் படத்திற்கு 80 கோடி மட்டுமே சூப்பர் ஸ்டார் சம்பளமாக பெற்றுள்ளார்.

Also Read : இழுத்துக் கொண்டே போகும் ஜெயிலர்.. டென்ஷன் பண்ணும் ரஜினி, குழப்பத்தில் நெல்சன்

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகரின் சம்பளம் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக நடித்தவர் ஜாக்கி ஷெராப். அந்தப் படத்திலேயே தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் இப்போது சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக ஜெயிலர் படத்தில் களம் இறங்கியுள்ளார்.

அண்மையில் இவர் நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு முன்னதாக ரஜினி பாலிவுட்டில் நடித்த உத்தர் தக்ஷின் படத்திலும் ஜாக்கி ஷெராப் நடித்திருந்தார்.

Also Read : 30 நிமிட பிளாஷ்பேக்கை பார்த்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? பீஸ்ட் விமர்சனத்தால் நெல்சன் படும்பாடு

இந்நிலையில் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் 80 கோடி சம்பளம் கொடுத்த நிலையில் அவருக்கு வில்லனாக நடிக்கும் ஜாக்கி ஷெராப்க்கு வெறும் 4 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. ஒரு பாலிவுட் நடிகருக்கு இது சம்பளம் குறைவு தான் என்றாலும் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்கும் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

மேலும் இப்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டு படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் இந்த படத்தை குறித்த அப்டேட் மற்றும் மற்ற பிரபலங்களின் பெயர்களும் விரைவில் சன் பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. இதற்காக ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : மனதில் ஒன்றை வைத்து கொண்டு நெல்சனை பாடாய்படுத்தும் சூப்பர் ஸ்டார்.. செய்வதறியாமல் திணறும் நெல்சன்

Trending News