Actor Rajini: ரஜினியின் வேட்டையன் படத்திற்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. லைக்கா தயாரிப்பில் ஜெய் பீம் ஞானவேல் படத்தில் அமிதாப்பச்சன் உட்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
160 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு முன்பே படத்தின் பிசினஸ் ஜோராக நடந்து வருகிறது.
வசூல் டார்கெட் வைத்த லைக்கா
லைக்காவும் இதுவரை இல்லாத அளவுக்கு காசு பார்த்து விட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறதாம். அதன்படி சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ், ஆடியோ உரிமை, தியேட்டர் உரிமை, ஓவர் சீஸ் பிசினஸ் என 1100 கோடிக்கு டார்கெட் வைத்திருக்கின்றனர்.
இதில் ஒரு பைசா கூட குறையாமல் சிந்தாம சிதறாம அள்ள வேண்டும் என தயாரிப்பு தரப்பு தீயாக வேலை பார்த்து வருகிறது. இதனால் சன் பிக்சர்ஸ் தான் இக்கட்டில் மாட்டி இருக்கின்றனர்.
லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் கூலி படம் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. சமீபத்தில் இதன் டைட்டில் டீசரை சன் பிக்சர்ஸ் ஆரவாரமாக வெளியிட்டது.
அதை அடுத்து படம் 1000 கோடி வசூல் என்ற பெருமையை தட்டி தூக்கும் என்றும் பேசப்பட்டது. ஆனால் இப்போது வேட்டையன் போட்டிக்கு வந்துள்ள நிலையில் அதைவிட அதிக வசூல் பார்க்க வேண்டும் என்ற பதட்டத்தில் சன் பிக்சர்ஸ் இருக்கிறதாம்.