சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கஞ்சத்தனத்தின்  உச்சம்  சென்று லோகேஷ்க்கு செக் வைக்கும் சன் பிக்சர்ஸ்.. தலைவர் படத்துக்கே மாறன் போடும் கண்டிஷன்

Sun Pictures giving a check to Lokesh: கடந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தலைவர் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் 600 கோடியை தாண்டி சாதனை செய்தது.

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை தலைவர் 171 படத்திற்காக  ஒப்பந்தம் செய்துள்ளனர்.

உயர்தர தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்பாராத ஆக்சன் காட்சிகளுடன் இந்த தலைமுறை விரும்பும் வண்ணம் சுவாரசியத்தை கூட்டி, ரசிகர்கள் இமை கொட்டாமல்பார்க்குமாறு திரைக்கதையை அமைத்து வெற்றி இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ்.

கைதி, மாஸ்டர், விக்ரம் என பல வெற்றி படங்களின் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து தலைவர் 171க்கு ஆயத்தமாகி வருகிறார் லோகேஷ்.

தலைவர் 171 க்கு லோகேஷ் வைக்கும் டிமாண்ட்

சமீபத்தில் தலைவர் 171 பட போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துள்ளார் இயக்குனர். 

தரமான, ஆக்சன் தெறிக்கும் கேங்ஸ்டர் ஸ்டோரியாக உருவாக உள்ளதால் தனக்கு உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய ஐமேக்ஸ் கேமரா தான் வேண்டும் என்று  தயாரிப்பு நிறுவனத்திடம் டிமாண்ட் வைத்துள்ளாராம் லோகேஷ்.

அந்த கேமரா  விலை உயர்ந்தது மட்டுமின்றி அதற்கு 10 நபர்கள் கூடவே வார்களாம்.

இதனால் தயாரிப்பு செலவு பன்மடங்கு கூடும் என்பதில் அச்சம் கொண்டு உள்ளனர் சன் பிக்சர்ஸ்.

அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்கள் தான் இந்த திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று  பிடிவாதமாக கூறியுள்ளாராம்.

ஏற்கனவே மனோஜ் பரமஹம்சா விஜய்யின் நண்பன், பீஸ்ட், லியோ முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு அமைத்தது குறிப்பிடத்தக்கது.

சன்  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் ஒளிப்பதிவு அமைப்பதற்காக மனோஜ் பரமஹம்சா 13 கோடி வரை பில் போட்டு வாங்கி உள்ளது சன் பிக்சர்ஸ்க்கு அதிர்ச்சியை அளித்ததாம்.

இப்போது அவர்தான் வேண்டும் என்று கூறியதும் முடியாது என்பது போல் மறுக்கின்றனராம் தயாரிப்பு நிறுவனம்.

லோகேஷின் காஸ்ட்லியான டிமாண்டுகளை ஏற்க முடியாமல் கஞ்சத்தனத்தோடு பட்ஜெட் விஷயத்தில் கறாராக நடந்து கொள்கிறது சன்பிக்சர்ஸ்.

இதனால் லோகேஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது பற்றி எதுவும் வாய் திறவாமல் மௌனம் காத்து வருகிறார்.

தலைவர் 171 படத்திற்கு கதாபாத்திரங்கள் தேடல் நடந்து வரும் நிலையில் தரமான கதா வில்லன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தலைவரின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடியை வசூலித்த நிலையில் சன் பிக்சர்ஸ் ஒத்துழைப்பு நல்கினால் லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் தலைவர் 171, ஆயிரம் கோடி வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Trending News