வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெயிலர் கலெக்ஷனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.. இரண்டே வாரத்தில் மொத்த ஆட்டத்தையும் க்ளோஸ் செய்த முத்துவேல்

Jailer Box Office Collection: கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் ரஜினி மற்றும் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், வசந்த் ரவி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ரஜினி மற்றும் நெல்சன் ஆகியோரின் முந்தைய படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி பெற்ற நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜெயிலர் படத்தை எதிர்நோக்கி இருந்தனர். அவர்கள் போட்ட உழைப்பிற்கு கைமேல் பலனாக வசூலை வாரி குவித்து உள்ளது ஜெயிலர். தமிழ் சினிமாவை பொருத்தவரையில் புதிய ரெக்கார்டை உருவாக்கி இருக்கிறது.

Also Read : ரெண்டு வாரத்தில் இந்தியளவில் வசூலில் அலப்பறை செய்த ஜெயிலர்.. தலை சுற்ற வைக்கும் தமிழ்நாடு கலெக்ஷன்

அந்த வகையில் ஜெயிலர் படத்தின் முதல் வார வசூல் 375 கோடி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருந்தது. இப்போது 600 கோடியை ஜெயிலர் படம் தாண்டிவிட்டதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் வசூல் விபரத்தை வெளியிட்டு இருக்கிறது.

தனது அதிகாரப்பூர்வ தளத்தில் சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படத்தின் ஹூக்கும் பாடல், ரஜினியின் மாஸ் என்ட்ரியுடன் வசூலை வெளியிட்டு இருக்கின்றனர். அதன்படி இதுவரை ஜெயிலர் படம் 525 கோடி வசூல் செய்திருக்கிறது. இதை அறிந்த ரஜினி ரசிகர்கள் இப்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

Also Read : 72 வயதிலும் ரஜினிக்கு போட்டி போட்டு வரும் டாப் இயக்குனர்கள்.. ஷங்கரின் மூளையை திசை திருப்பிய ஜெயிலர் வெற்றி

இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் படங்கள் முதல் இரண்டு இடத்தில் அதிக வசூல் பெற்ற படங்களாக இருந்தது. ஆனால் அந்த சாதனையை ரஜினி ஜெயிலர் படம் முறியடித்து இருக்கிறது. இப்போதும் பல இடங்களில் திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகத்தான் இருக்கிறது.

ஆகையால் ஜெயிலர் படம் எப்படியும் 600 கோடி வசூலை தொடும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் ரஜினியின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் ஜெயிலர் படம் பெற்றிருக்கிறது. 72 வயதில் பல சாதனைகளை முறியடித்து உச்சாணிக் கொம்பிற்கு சென்று இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Also Read : ஜெயிலர் ரிலீசுக்கு முன்பு இது மட்டும் நடந்திருக்கணும்.. அண்ணாத்தய விட மோசமான தோல்வி பார்த்திருப்பார் ரஜினி

Trending News