திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியின் அடுத்த பட சம்பளம் வெளிவந்தது.. ஆசியாவிலேயே நம்பர் 1 என நிரூபித்த தலைவர்

Thalaivar 170 Rajini Salary: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்த ரஜினி மறுபடியும் நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார். இன்னும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினி இருக்கிறார்.

தலைவர் 170 படத்தை ஜெய் பீம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். அதன் தொடர்ச்சியாக தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ரஜினி தலைவர் 171 படத்திற்காக 280 கோடியை சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

இது அவரை ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும், இந்திய சினிமாவில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் நடிகராகிறார். இது மட்டுமல்ல சன் நெட்வொர்க் குழுமத்தின் ஆடிட்டர் கவுன்சிலின் ஆலோசனையின் அடிப்படையில் ஆரம்பத்தில் சன் பிக்சர்ஸ் NSC பகுதியின் விநியோக உரிமையை அவருக்கு வழங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக இருந்தது.

Also Read: எப்படியாவது தலைவர் ரஜினி கூட நடிக்கணும்.. வரிஞ்சு கட்டி வந்த 5 நடிகர்கள் ?

ஆனால் பல்வேறு காரணங்களால் சூப்பர் ஸ்டார் அதை மறுத்தார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கண்ட சூப்பர் ஸ்டார் அதன் தொடர்ச்சியாக தலைவர் 171 படத்திலும் நடிப்பதால் உலகம் முழுவதும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இதை மனதில் வைத்து தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், இதற்கு முன் எப்போதும் இல்லாத மிகப்பெரிய சம்பளத்தை ரஜினிக்கு வழங்குவதாக முடிவெடுத்தனர். ஜெயிலர் படத்தில் 110 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி தலைவர் 171ல் 280 கோடி சம்பளம் வாங்கி இருப்பது பலரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது.

இவ்வளவு பெரிய சம்பளம் குறித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ​​பாக்ஸ் ஆபிஸ் பேரரசர் தலைவர் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட வசூலில் 10 மடங்கு பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரும் என்று அசல்ட்டாக சொன்னார்.

Also Read: எவ்வளவு முக்கினாலும் ஜெயிலர் பட வசூலை தொட கூட முடியாத லியோ.. 12 நாளில் மொத்த ரிப்போர்ட்

Trending News