மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி ரசிகர்களின் பார்வை தளபதி 65 படத்தின் மீது விழுந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் என்ற பழைய பேஷண்டை வீட்டிற்கு அனுப்பிவிட்டு புது பேஷண்ட்டான நெல்சனை தளபதி ரசிகர்கள் தற்போது அட்மிட் செய்துள்ளனர். நெல்சன் எந்தஓரு பதிவு போட்டாலும் தளபதி 65 படத்தைப்பற்றி அட்டேட் கேட்டு நச்சரித்து கொண்டிருக்கின்றனர்.
நெல்சன் தற்போது தளபதி 65 படத்தின் கதை அமைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறாராம். மேலும் தளபதி 65 படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.
இந்நிலையில் நெல்சன் படத்திற்கு தேவையான நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் வேலைகளையும் ஒரு பக்கம் பார்த்து வருகிறாராம். அந்த வகையில் இதுவரை தளபதி விஜய்யுடன் ஜோடி போடாத நடிகையை பயன்படுத்த முடிவு செய்து இரண்டு முன்னணி நடிகைகளின் பெயர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பரிந்துரை செய்துள்ளாராம்.

அவர்கள் வேறு யாருமில்லை. தெலுங்கு சினிமாவின் டாப் நடிகைகளாக இருக்கும் பூஜா ஹெக்டே மற்றும் ரஷ்மிகா மந்தனா தான். இந்த லிஸ்டை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி விஜய்க்கு அனுப்பியுள்ளதாம். விஜய் பார்த்து ஓகே செய்துவிட்டால் அடுத்தடுத்த வேலைகளில் சுறுசுறுப்பாக களமிறங்கி விடுமாம் தளபதி 65 குழு.

மாஸ்டர் படத்தைப் போலவே தளபதி விஜய்யை மாறுபட்ட வேடத்தில் காட்ட பயங்கரமாக மெனக்கெட்டு வருகிறாராம் நெல்சன். எந்த அளவுக்கு காமெடி இருக்குமோ அதே அளவுக்கு ஆக்ஷனும் இருக்கும் என்கிறார்கள் தளபதி 65 வட்டாரங்கள்.