சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மனுசனுக்கு வாக்கு தான் முக்கியம்.. லாரன்ஸ் மீது அதிருப்தியில் சன் பிக்சர்ஸ்

ராகவா லாரன்சுக்கு எப்போதுமே சப்போர்ட்டாக இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அவர் மீது கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக வெளிவந்த செய்தி கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது. அதற்கு லாரன்ஸின் புதிய நட்பு தான் காரணம் எனவும் கூறுகின்றனர்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான முனி, காஞ்சனா போன்ற படங்களைத் தவிர அவர் மாஸ் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படம் விமர்சன ரீதியாக கழுவி ஊற்றப்பட்டாலும் வசூல் ரீதியாக 100 கோடியை தாண்டியது.

அதற்கு சன் பிக்சர்ஸின் விளம்பரமும் ஒரு காரணம். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக காஞ்சனா4 படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்தது. ஆனால் அதற்கு முன்பே சந்திரமுகி 2 படத்தை எடுத்து விடலாம் எனவும் கேட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் மற்றும் பி வாசு கூட்டணியில் 2005ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இரண்டு வருடங்கள் தியேட்டரில் ஓடிய படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இப்பேர்பட்ட படத்தின் இரண்டாம் பாகத்தை பி வாசு எடுக்க உள்ளாராம். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அவரே தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் என்ற தயாரிப்பாளரின் புதிய நட்பு கிடைத்ததால் லாரன்ஸ் அவருக்கு தொடர்ந்து ருத்ரன், அதிகாரம் போன்ற படங்களை தொடர்ச்சியாக நடித்து கொடுக்கிறாராம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்னரே சந்திரமுகி 2 படத்திற்கான ஒப்பந்தத்தை போட்டுவிட்டு 2022ஆம் ஆண்டு தான் படப்பிடிப்பை தொடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

முன்னதாக 2021 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விடலாம் என கூறிய ராகவா லாரன்ஸ் தற்போது அவருடைய புதிய நண்பருக்கு அதிக சலுகை தருவதால் அதிருப்தியில் உள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

chandramukhi-2-cinemapettai
chandramukhi-2-cinemapettai

Trending News