செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Ilaiyaraja: தேன்கூட்டில் கை வைத்த இளையராஜா.. உக்ரத்தோடு காத்திருக்கும் சன் பிக்சர்ஸ்

Ilayaraja: இளையராஜா, வைரமுத்து பிரச்சனை ஒரு பக்கம் கூலி டீசர் சர்ச்சை ஒரு பக்கம் என பரபரப்பை கிளப்பி வருகிறது. இதில் சன் பிக்சர்ஸ் என்ன செய்யப் போகிறது என்பதை தான் பலரும் கவனித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டாரிடம் கூட இன்று பத்திரிகையாளர்கள் இளையராஜா விவகாரத்தை பற்றி கேட்டனர். அதற்கு அவர் இது ப்ரொடியூஸருக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை என ஒதுங்கி விட்டார்.

அதிலிருந்தே நிச்சயம் ஏதோ சம்பவம் இருக்கு என பேசப்பட்டது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் பாண்டியன் இளையராஜா தேன் கூட்டில் கை வைத்தது போல் சன் நிறுவனத்திடம் சிக்கிவிட்டார் என பகீர் கிளப்பியுள்ளார்.

அதாவது சன் நெட்வொர்க் மிகப் பெரிய அளவில் பிசினஸ் செய்பவர்கள். அவர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனை தருவதற்கு ஒரு குழுவே இருக்கிறது.

சன் பிக்சர்சை எதிர்த்த இளையராஜா

அப்படி இருப்பவர்கள் இது போன்ற ராயல்ட்டி விஷயத்தை எல்லாம் கவனிக்காமலா இருந்திருப்பார்கள். நிச்சயம் இதற்கு சன் பிக்சர்ஸ் பதிலடி கொடுக்க காத்திருப்பார்கள்.

அதேபோல் இந்த விவகாரம் கோர்ட்டுக்கு வந்தால் இளையராஜாவுக்கு தான் அவமானம் ஏற்படும். எப்படி லதா ரஜினிகாந்தை கோர்ட் எச்சரித்து அனுப்பியதோ இசைஞானிக்கும் அதுதான் பரிசாக கிடைக்கும்.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இவர் தேவையில்லாமல் பிரச்சனை செய்திருக்கிறார். அதன் பலனை இளையராஜா கட்டாயம் அனுப்பவிப்பார் என பாண்டியன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Trending News