வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

15 நாட்களில் புருஷனை மாற்றும் சன் டிவி நடிகை.. கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தி 2வது கணவர்

இப்போது விளம்பரத்திற்காகவே திருமணம் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அப்படி திருமணம் செய்தால் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சமீபகாலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் விவாகரத்துச் செய்தி அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க சமரசமாக இருவரும் பிரிந்தால் இருவருக்குமே நல்லது. ஆனால் சண்டை போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் கூறி வருகின்றனர். இதனாலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இப்போது ஒரு பிரச்சனை இணையத்தில் பூதாகரமாக போய்க்கொண்டிருக்கிறது.

Also Read :  டிஆர்பி-யில் தெறிக்கவிடும் முதல் 5 சீரியல்கள்.. சன் டிவியை தூக்கிவிடும் குணசேகரன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன் டிவி சீரியல் நடிகையான திவ்யா நடிகர் அர்னவ் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதாவது தன்னை திருமணம் செய்து கொண்டு வேறு ஒரு சீரியல் நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் என்னை துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் அர்னவ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.

மேலும் சமீபத்தில் தனது இரண்டு மாத கைக்குழந்தையுடன் திவ்யா படப்பிடிப்புக்கு வந்த புகைப்படம் இணையத்தில் பேசு பொருளாக மாறியது. இப்போது அர்னவ் திவ்யாவை பற்றி சில விஷயங்களை வெளியிட்டு இருக்கிறார். அதாவது திவ்யாவை பொருத்தவரையில் ஒரு ஆணுடன் 15 நாட்கள் மட்டுமே வாழ்வார்.

Also Read : தளபதியை வைத்து டிஆர்பியை ஏற்றிய சன் டிவி.. கோட்டை விட்ட விஜய் டிவி

முதல் கணவருடன் 15 நாட்கள், என்னுடன் 15 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்தினார். அதுமட்டும் இல்லை என்னுடன் வாழும்போது வேறு ஒருவர் உடன் திவ்யா கள்ளத்தொடர்பில் இருந்ததாக அர்னவ் பகீர் கிளப்பியுள்ளார். ஆனால் வெளியில் நான் கெட்டவன் போல திவ்யா சித்தரித்து உள்ளார்.

இவ்வாறு திவ்யா மீது அடுக்கடுக்கான புகார்களை அர்னவ் வெளியிட்டு இருந்தார். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக இருப்பதால் யூடியூப் சேனலுக்கு தீனி போட்டது போல் இவர்களை மாறி மாறி பேட்டி எடுத்து வருகிறார்கள்.

Also Read : சாருபாலா பேச்சால் பயத்தில் புலம்பும் குணசேகரன்.. ஜனனி, ஆதிரை திருமணத்தில் வைத்திருக்கும் பிளான்

Trending News