சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அடுத்த விவாகரத்தை உறுதி செய்த சன் டிவி சீரியல் நடிகை.. நீங்க சொல்ற காரணம் நம்புகிற மாதிரியா இருக்கு!

Sun TV actress who can’t give up Zee Tamil serial: சன் டிவியில் எத்தனையோ நாடகங்கள் வந்திருந்தாலும், அதில் சில நாடகங்களை மட்டும் மறக்கவே முடியாது. அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது ரோஜா சீரியல் தான். முக்கியமாக இதில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா நல்காரி மற்றும் இவருக்கு கணவராக நடித்த சிப்பு சூரியன் என்கிற அர்ஜுன் இவர்களுடைய காம்பினேஷன் ரொம்பவே மக்களுக்கு பிடித்து போய்விட்டது.

அடுத்ததாக ஜீ தமிழில் மறுபடியும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் சீதாராமன் என்ற நாடகத்தில் சீதாவாக இவருடைய நடிப்பை தொடங்கினார். ஆனால் அந்த சமயத்தில் தான் இவருடைய கல்யாணமும் நடந்து முடிந்தது. இவர் ராகுல் என்பவரை காதலித்து வந்ததால் பெற்றோர்களின் சம்மதத்துடன் மலேசியாவில் இவர்களுடைய கல்யாணம் சிம்பிளாக நடந்து முடிந்து விட்டது.

அதன் பின் தொடர்ந்து நாடகத்தில் நடித்து வந்த ரோஜாவிற்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அதாவது கணவர் மலேசியாவில் வேலை பார்ப்பதும், இவர் சென்னையில் இருந்து நடிப்பதுமாக இரண்டு பேரும் பிரிந்து இருப்பது போல் வாழ்க்கை அமைந்து விட்டது. ஆனால் இது இவர்களுக்கு போகப் போக செட்டாகவில்லை என்பதால் கணவரை ஒரேடியாக சென்னைக்கு வரவழைத்து ஹோட்டல் நடத்தலாம் என்று முடிவு எடுத்திருந்தார்.

Also read: விஜயாவிடம் தொக்காக மாட்டப் போகும் மீனா.. முத்துவின் சண்டையை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடும் ரோகிணி

அதற்கான ஏற்பாடுகளையும் ஆரம்பித்து அந்த போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் பிரியங்கா நல்காரி வெளியிட்டு இருந்தார். அதன் பின் திடீரென்று சீதாராமன் நாடகத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் பிரியங்கா நல்காரி பாதியிலேயே போய்விட்டார். பிறகு கொஞ்ச நாளைக்கு அப்புறம் மறுபடியும் ஜீ தமிழில் நள தமயந்தி நாடகத்தின் மூலம் இவருடைய நடிப்பை தொடங்கி விட்டார்.

இதனால் கணவருக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது. இதனைத் தொடர்ந்து கணவர் என்னுடன் வந்து மலேசியாவில் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடும் அளவிற்கு போய்விட்டார். ஆனால் பிரியங்கா என்னால் நடிப்பதை விட முடியாது. நான் தொடர்ந்து சீரியலில் நடிக்க வேண்டும் அதுதான் எனக்கு மனதிருப்தி என்று சொல்லிய பொழுது இருவரும் பரஸ்பரமாக தற்பொழுது பிரிந்து வருவதாக தெரிகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ரசிகர் ஒருவர் பிரியங்கா நல்காரியிடம் நீங்கள் சிங்கிளா என்ற கேள்வி கேட்டதற்கு அவரும் ஆமாம் நான் சிங்கிள் தான் என்று சொல்லி இன்ஸ்டாகிராமில் கணவருடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் டெலிட் செய்து விட்டார். திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளேயே கணவனை விட்டு பிரியும் அளவிற்கு ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

Also read: கதிருக்கு ராஜியை திருமணம் செய்து புருஷன் மானத்தை வாங்கிய கோமதி.. இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்ல இருந்திருக்கலாம்

Trending News