செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

திடீரென்று சீரியலில் இருந்து விலகி, சைலண்டா திருமணத்தை முடித்த சன் டிவி நடிகை.. வைரலாகும் கல்யாண புகைப்படம்

Sun TV Serial Actress: அவசர அவசரமாக சீரியலில் இருந்து விலகிய நடிகை ஒருவர் யாருக்கும் தெரியாமல் காதும் காதுமாய் வைத்த படி காதலித்தவரை கரம் பிடித்திருக்கிறார். இவர்களது திருமண புகைப்படத்தை அந்த சீரியல் நடிகையே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற சீரியலில் அர்ச்சனா என்ற கேரக்டரில் கனகச்சிதமாக நடித்து வருபவர் தான் நடிகை ரம்யா கௌடா. இவருக்கென்று ஏகப்பட்ட சின்னத்திரை ரசிகர்கள் இருக்கின்றனர்.

Also Read: டிஆர்பி-க்காக ஆர்டிஸ்ட்களை பாடா படுத்தும் எதிர்நீச்சல்.. குணசேகரனின் தம்பி பொண்டாட்டிக்கு போடப்பட்ட ட்ரிப்ஸ்

சீரியலில் ரொம்பவே எதார்த்தமாக நடிக்கும் ரம்யா கௌடா திடீரென்று செவ்வந்தி சீரியலில் இருந்து விலகி விட்டார். இந்த சீரியலில் இருந்து எதற்காக அவர் விலகினார் என்ற காரணமும் தெரியாமல் சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது.

இந்த நிலையில் ரம்யா கௌடா நீண்ட நாட்களாக காதலித்த நடிகர் பார்கவ் என்பவரை இருதரப்பு பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் தற்போது திருமணம் செய்து கொண்டார். பார்கவ்-வும் ஒரு சீரியல் நடிகர் தான். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

Also Read: குணசேகரன் இல்லாத குறையை தீர்க்க வரும் பொம்பள ரவுடி.. எவ்வளவு முடியுமோ உருட்டுங்க நாங்க வெயிட் பண்றோம்

செவ்வந்தி சீரியல் நடிகை ரம்யா கௌடாவிற்கு திருமணம் ஆனது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. அத்துடன் இவர்களது திருமண புகைப்படமும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.

இந்த திருமணத்திற்கு பல சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அத்துடன் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் குவிக்கின்றனர்.

ரம்யா கௌடா- பார்கவ் திருமண புகைப்படம்

sevvandhi-serial-actress-marriage-photos-cinemapettai
sevvandhi-serial-actress-marriage-photos-cinemapettai

Also Read: ஆபத்தான ஆதி குணசேகரனாக வரும் பெருமாள் நடிகர்.. விட்ட டிஆர்பி-யை பிடிக்கும் எதிர்நீச்சல்

Trending News