ஊடகத்துறையில் பயணிப்பவர்கள் தங்களின் கனவு ஏதோ ஒரு புள்ளியில் நினைவாக தொடர்ந்து ஓடிக்கொண்டு இருப்பவர்கள் தான். அதன்படி ஊடகத்துறையில் வளர்ச்சி அடைய இன்று யூட்யூப், இணையதளம் என பல தளங்கள் இருந்தாலும், சிவகார்த்திகேயன் என்னும் ஒரு நடிகரை தமிழ் சினிமா பெற்று இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் விஜய் டிவி தான். அவர் போட்டு வைத்த பாதை தான் இன்று பலரை அந்த முயற்சியில் ஈடுபட செய்து இருக்கிறது.
அதன் பின் விஜய் டிவிக்கு போனால் போதும் ஹீரோதான் என்ற பேச்சு அதிகமானது. ஆனால் விஜய் டிவி தொடர்ந்து கொடுத்த பல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டதால் மட்டுமே, அவரால் அந்த உச்சத்தை அடைய முடிந்தது. அப்படி இன்றும் பல இளம் கலைஞர்களை நட்சத்திரங்களாக மாற்றி இருக்கிறது மாற்றியும் வருகிறது.
ஆனால் விஜய் டிவியின் நேரடிப் போட்டியாக கருதப்படும் சன் டிவியில் பலர் பிரபலம் ஆகலாம் என்று நினைத்து, சன் மியூசிக்கில் பல ஆண்டுகளாக ஷோ செய்த ரியோ, சன் டிவியில் மாமியாக காமெடி ஷோவில் அறிமுகமான பிரியங்கா, கலக்கப்போவது யாரு அசார், வடிவேலு பாலாஜி என பலரை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இவர்கள் அனைவருமே திறமையானவர்கள் என்று இன்று நம் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் அது வெளியானது சன் டிவியில் இருந்து வெளியேறி விஜய் டிவியில் நுழைந்த போதுதான்.
அதுவரை அவர்கள் மேல் விழுந்த வெளிச்சம் வேறு. விஜய் டிவி அவர்களுக்கு அளித்த வெளிச்சம் வேறு. சிலருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் பிரகாசமாக அமைந்தது. இவர்கள் மட்டும் அல்ல, இவர்களை போல பலரின் வாழ்வு விஜய் டிவியில் தான் மாறி இருக்கிறது. ஆனால் சன் டிவி இவரகளை சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சன் டிவி மிகப்பெரிய பிராண்டாக இருந்தாலும், இதுபோன்ற சில திறமையாளர்களை வளர்க்க மறந்து விட்டது. விஜய் டிவி சிலரை வளர்த்தது மட்டுமில்லாமல், அவர்களை வைத்து தங்களின் பிராண்டையும் பெருமையாக பேசிக்கொள்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சி தமிழ் சினிமாவின் நுழைவு வாயிலாக இருக்கிறது என்பது எவராலும் மறுக்க முடியாதது தான். ஆனால் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே வைத்து இருக்கும் சன் நெட்வொர்க் அதைச் செய்யாமல் ஏன் நல்லத் திறமையாளர்களை தவறவிடுகிறது என்று தெரியவில்லை